ரூ. 300 மில்லியன் செலவு; வெள்ளோட்ட நிகழ்வில் ஜனாதிபதி
கடற்றொழில் நீரியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் பொரு ட்டு முதன் முதலாக சமுத்ரிகா கப்பல் வெள்ளோட்டமிடப்பட்டது.
ரூ. 300 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்கப்பலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அண்மையில் அம்பாந்தோட்டை துறை முகத்தில் வெள்ளோட்டமிட்டார்.
இதையடுத்து கடல் ஆராய்ச்சி பாரிய வளர்ச்சியடையவுள்ளதுடன் இதற்கென இரவு பகலாக 07 விஞ்ஞானிகள் சேவையில் ஈடுபடவுள்ளனர்.
பின்னர் மத்தளை விமான நிலையத் திற்கு ஜனாதிபதி விஜயம் செய்தார். இந்நிகழ்வுகளில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, உணவு, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரனாந்து, அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. உட்பட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.