லக்மால் சூரியகொட)
லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கண்டி பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அனுமதி பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய பாடசாலை மாணவனிடம் 2,000 ரூபா பணம் இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சந்தேக நபரான சிஸிர குமார இன்று திங்கட்கிழமை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். இவர் 3,000 ரூபா இஞ்சம் கோரியதாகவும் 2,000 ரூபாவை கண்டி – பேராதெனிய பிரதான வீதியிலுள்ள கடையொன்றில் வைத்து பெற முற்பட்ட போது கைது செய்யப்பட்டதாக சட்டத்தரணிகள் இதன்போது தெரிவித்தனர்.
குறித்த மாணவனிடமிருந்து சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் 700 ரூபா இலஞ்சமாக பெற்றுள்ளார் எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை அடுத்து, பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.