டாக்கா:
வங்கதேச விடுதலைக்கு உதவிய இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால், மறைந்த அமைச்சர் ஜெகஜீவன் ராம், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி அசோக் டரா
உள்பட 51
இந்தியர்கள்
நேற்று கவுரவிக்கப்பட்டனர்.
கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் செயல்பட்டு வந்த
வங்கதேசம்
1971ம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பிறகு
தனிநாடாக பிரிக்கப்பட்டது. அந்த போரில் உதவி புரிந்த 61 வெளிநாட்டவர்களை அந்த அரசு
கவுரவித்தது.வங்கதேச அதிபர் ஜில்லுர் ரஹ்மான், பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.
வயதான பலர் சக்கர நாற்காலியில் வந்து மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
இறந்துவிட்டவர்களின் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் மரியாதையை ஏற்றுக்
கொண்டனர்.மொத்தம் 61 பேர்
கவுரவிக்கப்பட்டனர். அவர்களில் 51 பேர்
இந்தியர்கள். முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால், நேபாள முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா
ஆகியோருக்கு வங்கதேச விடுதலைப் போர் மரியாதை விருதும், மற்றவர்களுக்கு விடுதலைப் போர்
நண்பர்கள் விருதும் வழங்கப்பட்டன.ஜெகஜீவன் ராமுக்கான விருதை அவரது பேரனும் மக்களவை
தலைவர் மீராகுமாரின் மகனுமான அன்ஷுல் அபிஜித் பெற்றுக்கொண்டார். மறைந்த தந்தை கைபி
ஆஸ்மீக்கான விருதை நடிகையும் மாநிலங்களவை உறுப்பினருமான ஷபானா ஆஸ்மி
பெற்றுக்கொண்டார்.வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவையும், அவரது குடும்பத்தையும் போரின்போது காப்பாற்றிய ராணுவ
அதிகாரி அசோக் டரா நேரில் வந்து மரியாதையை ஏற்றுக்கொண்டார்.dinakaran
ஏனைய பதிவுகள் ;
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.