......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 16 October 2012

இலங்கையில் வருடாந்தம் சுமார் 2700 சிசுக்கள் மரணம்!


Babyஇலங்கையில் வருடாந்தம் சுமார் 2700 சிசுக்கள் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியக  பிரதிப் பணிப்பாளர் டாக்டர் சித்ரமாலி டி சில்வா  தெரிவித்தார்.




இச்சிசுக்கள் பிறந்தது முதலான 28 நாட்களுக்குள் உயிரிழப்பதாகவும் அவற்றில் 70 சதவீதமானவை நோய்த் தொற்று காரணமாக பிறந்து  முதல் மூன்று நாட்களுக்குள் உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலக கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு சுகாதார கல்வி பணியகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டின் போதே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.


இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும்  உரையாற்றுகையில் ஆசியாவிலேயே தாய் - சேய் ஆரோக்கிய சேவை சிறப்பாக உள்ள நாடாக இலங்கை விளங்குகின்றது.

இந்நாட்டில் 98 சதவீதமான பிரசவங்கள் அரசாங்க ஆஸ்பத்திரிகளிலேயே  இடம்பெறுகின்றன. இந்நாட்டின் தாய் - சேய் ஆரோக்கிய சேவை சிறப்பாக இருப்பதால் தான் தாய் - சேய் மரணங்களும் பெரிதும் குறைவடைந்து காணப்படுகின்றன. இதற்கு மருத்துவ மாதுகளின் பங்களிப்பு காரணமாகும்.

அதேநேரம் சிசுக்களை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிகளுக்குச் செல்லுபவர்கள் சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக கைகளை சவர்க்காரமிட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இந்நாட்டில் 13 வீதமான சிசுக்கள் நோய்த் தொற்று காரணமாக உயிரிழக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது அவசியம். அதேநேரம் அளவுக்கு அதிகமாகக் கைகளைச் சவர்க்காரமிட்டு கழுவினால் கைகளில் காணப்படும் நோயெதிர்ப்பு பக்ரியாக்கள் அழிவுறும் என்பதையும் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ளுவது அவசியம் எனவும் அவர் கூறினார்.

 சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் பாலித மஹீபால ,சுகாதாரக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் நீலமணி எஸ். ராஜபக்ஷ ,யுனிலீவர் நிறுவன சந்தைப் படுத்தல் பணிப்பாளர்  ரமணி சமரசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். tamilnews

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE