......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 16 October 2012

ரி-20 தனியான அணி - இலங்கை தெரிவாளர்கள் ஆலோசனை

"உலக ரி- 20 இறுதிப்போட்டியில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணியினால் 36 ஓட்டங்களில்  தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து இருபதுக்கு 20 என தனியான அணியை தோற்றுவிக்க கூடும்" என இலங்கை பிரதம தெரிவாளர்  அசந்த டி மெல் கூறினார்.


நியூசிலாந்துடன் ஒக்டோபர் 30 இல் விளையாடவுள்ள போட்டியில் இந்த புதிய அணி அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தலைவராக உதவி கப்டன் அன்ஜலோ மத்தியூஸ் நியமனம் பெறுவார்  என எதிர்பார்க்கப்படுகின்றது.

'இறுதி ரி -20  போட்டியில் இலங்கை அணியினால் ஒரேயொரு சிக்ஸ் மட்டுமே அடிக்க முடிந்தது. சரியாக இலக்கு வைத்து பந்தை அடிக்க கூடிய இளம் இளைஞர்களை நாம் தேடிப்பிடிப்போம்' என அசந்த டி மெல் கூறினார்.

'மஹேல ஜயவர்த்தன, அன்ஜலோ மத்தியூஸ் ஆகியோரால் எல்லைக்கு அப்பால் பந்தை அனுப்புமளவுக்கு பலம் இல்லை.  

எமது துடுப்பாடலுக்கு என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. முன்னர் முதல் ஆறு ஓவர்களில் குறைந்தது 50 ஓட்டங்களை எடுத்துவந்தோம். இறுதி போட்டியில் எமது அணி 30 ஓட்டங்களையே பெற்றது. இதனால் எதிரணியின் கையோங்கியது' என அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE