(நேர்காணல்- எஸ்.தயா)
அக்கு பஞ்சர் அல்லது குத்தூசி மருத்துவம் (acupuncture) என்பது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக அல்லது நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக, பிரத்தியேகமான குறிப்பிட்ட உடற்புள்ளிகளில் ஊசிகளைக் குத்தி மேற்கொள்ளப்படும் மருத்துவம் ஆகும். இது வலி நிவாரணத்துக்கும், உடலில் உணர்வற்றுச் சென்றுள்ள பகுதிகளில் உணர்வேற்படுத்தவும் இந்த சிகிச்சை முறை உதவுகின்றது.
இந்த குத்தூசிகள் உடலில் ஏற்றப்படும் போது நரம்புகளில் இரத்த ஓட்டவேகம் சீர்படுத்தப்படுவதன் ஊடாக நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன என்கிறார் வைத்திய நிபுணர் உதய நந்தன.
அக்குபங்சர் பற்றி சிறிய அறிமுகம் ஒன்றைத்தாருங்கள்?
இலங்கையில் தேசிய ரீதியாக ஆயுர்வேத சிகிச்சை முறை பிரபல்யமடைந்திருப்பதைப்போல் சீனாவில் தேசிய ரீதியில் அக்குபஞ்சர் முறை பிரபலமான ஒரு சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறையின் தாயகம் சீனாவாகும், அதன் பிறகு கொரியா முதலான நாடுகளில் இச் சிகிச்சை முறை பிரசித்தி பெற்றது. இலங்கையர்கள் சீனா சென்று இந்த அக்குபஞ்சர் முறையைக் (குத்தூசி முறையை) கற்றுக்கொண்டு வந்து இங்கு இம்முறையினால் சிகிச்சை வழங்கினர். ஆயுர்வேத, ஆங்கில மருத்துவம் என பல மருத்துவ முறைகள் இருந்த போதிலும் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக குத்தூசி முறை வைத்தியத்தை காணமுடியும்.
சீனாவில் அறிமுகமான இச்சிகிச்சை முறையானது அங்கு மிகவும் பிரபலமான வைத்தியமுறையாகும். ஏனைய நாட்டவர்களும் இந்த அக்குபஞ்சர் முறையை கற்றுக்கொண்டு தமது நாடுகளுக்கு சென்று சிகிச்சை அளித்துவருகின்றனர்.
சீனாவில் அறிமுகமான இச்சிகிச்சை முறையானது அங்கு மிகவும் பிரபலமான வைத்தியமுறையாகும். ஏனைய நாட்டவர்களும் இந்த அக்குபஞ்சர் முறையை கற்றுக்கொண்டு தமது நாடுகளுக்கு சென்று சிகிச்சை அளித்துவருகின்றனர்.
சகலவிதமான நோய்களுக்கும் இச்சிகிச்சை மூலம் தீர்வுகாணமுடியுமா?
எமது உடலில் இருக்கும் வலுவை கிளப்பிவிட்டு அதனை மருந்தாகப் பயன்படுத்துவதே இதன் நோக்கம். இதில் குறிப்பிடும்படியாக பக்க விளைவுகள் இல்லை எனலாம், நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் செருகி சிகிச்சை அளிப்பதே அக்குபஞ்சர் சிகிச்சை முறையாகும். ஒவ்வொரு நோயையும் பொறுத்து அக்குபஞ்சர் புள்ளிகள் (குத்தூசிப் புள்ளிகள்) நடுவரை (மெரிடியன் அல்லது ஓடுபாதை) நோய்களுக்குரிய புள்ளிகள் என இனங்காணப்பட்டே குத்தூசிகள் ஏற்றப்படும்.
உடலில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஒவ்வொரு உறுப்புக்கான குத்தூசிப் புள்ளிகள் உண்டு. குத்தூசிப் புள்ளிகளிருக்கும் சரியான இடத்தில் ஊசி குத்தப்படும்போது அந்தந்த உறுப்புக்கான புள்ளிகள் தூண்டப்படுகின்றன.
இச்சிகிச்சை ஊடாக உடலின் அனைத்து உடலியக்க தொழிற்பாட்டையும் செயற்படுத்தச் செய்கிறது. இதில் நடுவரையின் (மெரிடியன்) தொழிலைத் தொடக்கி வைக்கிறது.
குத்தூசியின் தன்மை:
குத்தூசி பொதுவாக துருப்பிடிக்காத உருக்கினால் உருவாக்கப்படுகின்றது. எனினும் செப்பு, வெள்ளி, தங்கம் என்று வெவ்வேறு உலோகங்களிலும் கிடைக்கின்றது.
இவை வழமையாக ஒருதடவை மட்டும் பயன்படுத்தும் ஊசியாக இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் நோய் நுண்ம ஒழிப்புக்கு உட்படுத்தி மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த அக்குபஞ்சர் மருத்துவ சிகிச்சை முறைமூலம் நோய்களை எவ்வளவு காலத்துக்குள் குணப்படுத்தலாம்?
அது நோயைப் பொறுத்து வேறு படலாம், ஒவ்வொரு நோய்க்கும் உடலின் நிலைக்கு ஏற்றவாறு காலம் எடுக்கும். இது நோய் நிலையினைப் பொறுத்து வேறுபடும். இளைப்பு நோய்க்கு ஒரு மாதம், ஒன்றரை மாத காலம் சிகிச்சை பெறவேண்டும். ஆத்ரடிஸ் போன்ற நோய்களுக்கு, கழுத்து, தோள்பட்டை வலிகளுக்கு ஒரு கிழமை, மூன்று கிழமைகளுக்கு சிகிச்சை வழங்கலாம்.
கோமா போன்ற நோய்களுக்கு இந்த சிகிச்சை வழங்க முடியாது. உடல் மிகவும் பலவீனமடைந்த முதியவர்களுக்கு இந்த சிகிச்சை முறை உகந்தது அல்ல. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கும், 1–3 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும் இந்த சிகிச்சை முறை ஏற்றதல்ல.

இந்த மருத்துவ சிகிச்சை முறையானது வளர்ந்தோர், சிறுவர்கள் என்ற வயது பாகுபாட்டில் சிகிச்சை முறையில் மாற்றங்கள் உள்ளனவா?
பெரியவர்கள், சிறுவர்கள் என்ற வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் இந்த குத்தூசி சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. உடலில் உள்ள சரியான புள்ளிகளுக்கு சரியான முறையில் ஊசியை குத்துவதன் மூலம் உடலில் உள்ள நோய்களை குணப்படுத்தலாம். ஒவ்வொரு நோய்களுக்கும் ஏற்ப அவர்களின் உடலில் உள்ள வர்ம இடங்களின் புள்ளிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சை வழங்கப்படுவதால் பெரியவர்கள், சிறுவர்கள் என்ற வேறுபாடு இதில் இல்லை.
அக்குபஞ்சர் முறையிலான சிகிச்சையால் நோயாளிகளுக்கு ஏதாவது தோல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா?
அவ்வாறு சொல்ல முடியாது. காரணம் ஊசியின் அளவானது மிகவும் சிறியது. சுத்தமான இத்தகைய ஊசியை குத்துவதால் எந்த பாதிப்பும் தோலுக்கு ஏற்படாது. சிறிதளவு இரத்தம் கசியலாம். ஆனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. வைரஸ் உள்ளே செல்ல வாய்ப்பு இல்லை. காரணம் ஊசியை நீக்கும்போதே சருமத்தின் துளைகள் மூடிக்கொள்ளும். அதே சந்தர்ப்பத்தில் ஊசி குத்துவதால் வைரஸ் தாக்கி பாதிப்புக்குள்ளாவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.
நோய்களின் தன்மைகளைப் பொறுத்து ஊசிகளின் எண்ணிக்கை வேறுபடலாம். சாதாரணமாக 10 ஊசிகளை பயன்படுத்தலாம். ஒரு சிலருக்கு 25- – 30 ஊசிகளை உடலில் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு ஏற்றவாறு பாவிக்கலாம். அதன் மூலம் உதிர ஓட்டம் அதிகரிக்கும்.
சாதாரணமாக குத்து ஊசிகளை கையில் தான் குத்துகிறோம். இதற்கு கருவிகளை பயன்படுத்துவதில்லை. ஊசிகளை குறிப்பிட்ட இடத்திற்கு ஏற்றவாறு செருகி பின் மிகவும் சிறியளவில் மின்சாரத்தை உபயோகிக்கிறோம் (இது அனைவருக்கும் பயன்படுத்துவதில்லை) இதன் மூலம் உடலிலுள்ள வர்ம இடங்களை ஊக்குவித்து இரத்த நாடிகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். குத்திய ஊசிகளை அகற்றும்போது சுத்தமான பஞ்சுகளை பயன்படுத்தி அகற்றிவிடுகின்றோம். எந்தவிதமான மருந்து வகைகளையும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
இச்சிகிச்சை முறைக்கு உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டுமா?
எந்த ஒரு சிகிச்சை முறையைப் பெறும்போதும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் நோயை குணப்படுத்தலாம்.
உதாரணமாக சிறுநீரகநோயாளிகள் உகந்த உணவை எடுக்கவேண்டும். சீனி, மா போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். அதே போல் அதிக நிறையுடையவர்களை பார்த்தோமானால் அவர்கள் எடுக்கும் உணவின் அளவைக் குறைக்க
வேண்டும். அப்போது தான் அவர்களின் உடலின் எடையைக் கட்டுப்படுத்தலாம்.
உதாரணமாக சிறுநீரகநோயாளிகள் உகந்த உணவை எடுக்கவேண்டும். சீனி, மா போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். அதே போல் அதிக நிறையுடையவர்களை பார்த்தோமானால் அவர்கள் எடுக்கும் உணவின் அளவைக் குறைக்க
இப்போது இலங்கையில் இந்த சிகிச்சை முறைக்கு வரவேற்புள்ளதா?
இலங்கையை பொறுத்தமட்டில் பேராசியர் என்டன் ஜயசூரிய என்ற வைத்தியரே இலங்கைக்கு இந்த சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தினார். இவர் சீனா சென்று, கற்று பட்டம் பெற்று இலங்கையில் களுபோவில வைத்தியசாலையில் தனது முதல் பணியை ஆரம்பித்தார். அதன் பிறகு தான் இலங்கையில் இந்த அக்குபஞ்சர் மருத்துவம் பிரபல்யமானது. இலங்கையில் நீண்டகாலமாக சிகிச்சை நடைமுறையில் உள்ளது. தற்போது இந்த சிகிச்சை முறைக்கு அதிமானவர்கள் இணைகிறார்கள்.
காரணம் இந்த சிகிச்சை முறையில் எந்தவிதமான மருந்து மாத்திரைகளையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை. தனது உடலில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஒவ்வொரு உறுப்புக்கான குத்தூசிப் புள்ளிகள் உண்டு. குத்தூசிப் புள்ளிகளிருக்கும் சரியான இடத்தில் ஊசி குத்தப்படும்போது அந்தந்த உறுப்புக்கான புள்ளிகள் தூண்டப்படுகின்றன. நோயைக் குணமடைய வைக்கின்றது. உடலின் அனைத்து உடலியங்கு தொழிற்பாட்டையும் செயற்பட செய்கிறது. இதுவே அக்குபஞ்சர் சிகிச்சை முறையாகும்.

அக்குபஞ்சர் தொடர்பாக வைத்தியர் என்ற வகையில் உங்களின் கருத்தை கூறுங்கள்?
இச்சிகிச்சை முறையில் சகல நோய்களையும் குணப்படுத்தலாம். சகலவிதமான சரும நோய்களுக்கும், நோய்களை பொறுத்தும் காலம் தீர்மானிக்கப்படும். பாரிசவாத நோய்களுக்கு ஒரு மாத காலம் சிகிச்சை அளித்தால் சாதாரணமாக சுகப்படுத்தலாம். அதை விட மூன்றுமாதம், ஆறுமாத காலத்துக்குள் நிறையவே குணப்படுத்தலாம்.
ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை உடையவன். அவனுடைய நோய்க்கான காரணமும் வேறுபடும்.
ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை உடையவன். அவனுடைய நோய்க்கான காரணமும் வேறுபடும்.
ஒவ்வொருவருக்கும் நாடி பரிசோதனை செய்து நாம் சுயமாக புள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். அக்குபஞ்சரில் நோய்க்கான காரணத்தை எவ்வாறு துல்லியமாக கண்டறிவது மற்றும் எந்தப் புள்ளிகளை பயன்படுத்துவது என்பது மிக முக்கியமாகும். அக்குபஞ்சரில் வித்தியாசமான அணுகுமுறை மற்றும் நுணுக்கமான வகையில் புள்ளிகளைத் தெரிவு செய்து நோய்க்கான நாடிகளை பரிசோதனை செய்யும் போது நோயிற்கான காரணம் தெளிவாகத் தெரிந்துவிடும்.
மருந்து மாத்திரையிலும், சத்திரசிகிச்சை செய்தும் குணமாக்கக்கூடிய நோய் ஒரு சின்ன ஊசியினால் குணமாகிவிடும் என்றால் நம் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். நியாயமான சந்தேகம்தான். நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை. நம் உடம்புக்குள்ளேயே உண்டு. இதுதான் அக்குபஞ்சர் மருத்துவமுறையாகும்.
ஆனால், எந்த ஒரு குண்டூசியையும் இந்த மருத்துவத்துக்கு பயன்படுத்தலாம் என்று யாரும் தயவு செய்து முயன்றுவிடவேண்டாம். அது மிகவும் ஆபத்தாகிவிடும். அக்குபஞ்சருக்கு என பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் ஊசிகளை மட்டுமே சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பொதுவாக அக்குபஞ்சர் ஊசி 0.5 அங்குலம் -7 அங்குலம் வரை இருக்கும்.

இந்த ஊசிகளில் சிரிஞ் போல் துளைகளிருக்காது. அதனால் இந்த ஊசிகளுக்குள் இரத்தம் தங்காது. எனவே இரத்தத்தின் மூலம் பரவ வாய்ப்புள்ள நோய்களும் இந்த ஊசிகளினால் பரவாது என்பது சிறந்த விடயம். இருந்தாலும் ஒருவருக்கு பயன்படுத்தும் அக்குபஞ்சர் ஊசிகளை அடுத்தவருக்கு பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.
(மூலம்: )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.