அதிலும் காதலில் அதனுடைய ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லலாம். தன் காதலன் எப்போதும் தன்னுடனேயே இருக்க வேண்டும், தன்னை மட்டுமே விரும்ப வேண்டும் என்று ஒரு பெண் நினைப்பது நியாயம் தான். ஆனால் அவள் உங்கள் மேல் முழு நம்பிக்கை வைக்காவிட்டால்? பதட்டத்தில் பல தவறான செய்கைகள் மூலம் அவள் தன் பொறாமையை வெளிப்படுத்துவாள்.
அதுப்போன்ற 5 நடவடிக்கைகள் கீழே தரப்பட்டுள்ளன.
நம்பிக்கை இல்லாத ஒரு உறவு ஏற்படுத்தும் விரிசலை விட வேறு எதுவும் ஏற்படுத்திவிட முடியாது. உங்கள் மேல் உங்கள் காதலிக்கு முழு நம்பிக்கை இல்லாமல் போகும் போது, நீங்கள் உங்கள் சொந்தக்காரப் பெண்ணுடன் பழகினால் கூட, அது உங்கள் உறவைக் கெடுத்துவிடும்.
பெண்கள் எப்போதுமே கேள்விகளைக் கேட்டுக் குடைவது வழக்கம். அதே நேரத்தில் ஒரு பொறாமைப்படும் பெண்ணிடமிருந்து புறப்படும் எந்தக் கேள்விக்கும் நம்மால் இலகுவாக பதில் கூறிவிட முடியாது. நாம் எந்த பதிலைக் கூறினாலும், அது அவளுக்கு சரியான பதிலாகவே அமையாது.
உங்களுடன் வேலை செய்பவரோ அல்லது நீங்கள் தேநீர் அருந்த போகும் கடையில் வேலை செய்பவரோ ஒரு பெண்ணாக இருக்கலாம். அந்தப் பெண்களுக்கு உங்களைப் பிடிக்குதோ இல்லையோ, அவர்களுடன் எந்த நோக்கிலும் உங்கள் காதலியின் முன் பேசிவிடாதீர்கள். அப்படிப் பேசினால் அவள் படுத்தும் பாட்டில் நீங்கள் எந்தப் பெண்ணுடனும் பேச முடியாமல் போகலாம். ஆண்களே! பார்த்து கவனமாக நடந்துக்குங்க...
(மூலம்: tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.