......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 2 July 2013

உயர் நீதிமன்றுக்கு செல்வோம்: ஐ.தே.க

மத்திய மாகாண சபையில் 13 ஆவது திருத்தத்தை திருத்துவது தொடர்பிலான பிரேரணை நிறைவேற்றப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நாளை புதன்கிழமை வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது.

இந்த பிரேரணை மாகாண சபை சட்டங்களுக்கு புறம்பான முறையில் மத்திய மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளமையினால் அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று இடைக்கால தடையுத்தரவு பெற்றுக்கொள்ளப்படும் என்றும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் சஞ்சீவ கவிரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/73297-2013-07-02-09-52-54.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE