......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 14 July 2013

தேர்தலில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நான் மாத்திரமே இடம்பெற்றுள்ளேன்: தயாமாஸ்டர்

வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிப் பட்டியலில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நான் மாத்திரமே இடம்பெற்றுள்ளதாக தயா மாஸ்டர்  தெரிவித்தார்.

புலிகளின் சர்வதேச நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பான கே.பி. என்ற குமரன் பத்மநாதனோ அல்லது புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் பிரிவின் தலைவி தமிழினியோ இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தயா மாஸ்டர் தெரிவித்தார்.

இதேவேளை வடமாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து ஈ.பி.டி.பி இவ்வார இறுதிக்குள் தீர்மானிக்கும் என்று அக்கட்சியின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5850 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE