......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 16 July 2013

பொதுநலவாய மாநாட்டிற்கு வெளிநாட்டு ஊடகவியலாளர் வரலாம்: அரசாங்கம்

-டியான் சில்வா
 ஊடக அத்தாட்சிப்படுத்தலுக்கும் பொதுநலவாய நெறிப்படுத்தலுக்கும் அமைவான ஊடகவியலாளர்கள் யாரும் இவ்வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டில் செய்திகளை சேகரிப்பதற்கு இலங்கைக்கு வரமுடியுமென அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய சனல்-4 ஆவணப்படத்தின் இயக்குநர் கலம் மக்றே இலங்கைக்கு வரமுடியுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், ஊடக அத்தாட்சிப்படுத்தல் என்பது அரசாங்கத்திடமுள்ள பொறுப்பாகும். இந்த நெறிமுறைகளுக்கு அமைந்த எந்த ஊடகவியலாளலுக்கும் இந்த நிகழ்வில் செய்தி சேகரிப்பதற்கான ஊடக அத்தாட்சி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்தாட்சிப்படுத்தலுக்கான விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக ஏற்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த மாநாட்டுக்கான செலவுகள் பற்றி கருத்துரைத்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பொதுநலவாய வணிக அரங்கத்தின் வழயாக நாடு பெறக்கூடிய நன்மைகளை கருத்தில் எடுக்குமாறு அவர் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார். இலங்கையிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை, இந்த நாடு சர்வதேச அரங்கில் தனிமைப்பட்டும் போகவில்லை என்பதை இந்த மாநாடு எடுத்துக்காட்டவுள்ளது. எனவே, இது இலங்கைக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும் என்று மேல் மாகாண அமைச்சர் உதய கமன்பில்ல தெரிவித்தார்.


(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/75119-2013-07-15-16-58-40.html#sthash.9QvBT5QG.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE