......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 9 July 2013

டெக்ஸாஸில் மரண தண்டனைக்கு உள்ளான கைதிகளின் கடைசி வார்த்தை வெளியீடு

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் மரண தண்டனைக்கு உட்பட்டோரது கடைசி வார்த்தைகளை அந்த மாநிலத்தின் குற்றவியல் நீதித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

டெக்சாஸ் மாநிலத்தில் கடந்த ஜூன் 26 ஆம் திகதி 500 ஆவது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் கலிபோர்னியா, பிலொரிடாவுக்கு அடுத்து அதிகமானோர் மரண தண்டனைக்கு உள்ளான மாநிலமும் இதுவாகும். இந்நிலையில் மரண தண்டனைக்கு உள்ளானோர் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவை மரணத்தறுவாயில் மனிதரது நடத்தை குறித்து கண்டறிய உதவும் என நம்பப்படுகிறது. இந்த கடைசி வாக்கு மூலத்தில் ஒருசில குற்றவாளிகள் தனது குற்றத்தை முழுமையாக ஒப்புக்கொண்டுள்ளதோடு மேலும் சிலர் தாம் குற்றமற்றவர் என வலியுறுத்தியுள்ளனர்.
“நான் உங்களது குழந்தைகளை கொல்லவில்லை என்று உன்மை கூறியிருந்தேன்” என்று 1997 ஏப்ரலில் மரண தண்டனைக் உள்ளான டேவிட் ஸ்பென்ஸ் குறிப்பிட்டார். அதில் அவர் தனது கடைசி வார்த்தையாக “உண்மையில் நான் எவரையும் கொல்லவில்லை” என்றார்.
பொலிஸ் அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்ற சார்ள்ஸ் பேஸ¤க்கு 1986 ஆம் ஆண்டில் தனது 30 ஆவது வயதில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவர் தனது கடைசி வாக்குமூலத்தில் “நான் இதனை ஏற்றுக்கொள்கிறேன். நான் விடைபெற்றுக் கொள்வதாக அனைவருக்கும் கூறிவிடுங்கள்” என்றார். 2003 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கொல்பர்ன் என்பவர் பெண் ஒருவரை கற்பழிக்க முயன்று அவரை கத்தியால் குத்தி கொன்றதற்கு மரணதண்டனைக்கு உள்ளானார்.
மரண தண்டனைக்கு முன் அவர் அளித்த வாக்கு மூலத்தில், “இது நடந்திருக்க கூடாது; தற்போது நான் மரணித்துக் கொண்டிருக்கிறேன். கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. அது தவறு என்று எனக்கு தெரியும். யாரையும் நான் குற்றம்சாட்டவில்லை. என்னைத்தான் குற்றம் சாட்டுகிறேன்” என்றார்.
எனினும் மரண தண்டனைக்கு உள்ளாகும் தருணத்தில் ஒரு சிலர் நகைச்சுவையாக அல்லது கோபத்துடன் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் ஜேஸ் ஹெர்னா ண்டஸ் என்பவர் தனக்கு பிடித்தமான கால்பந்து அணியின் பெயரை உரக்கமாக சுத்தி ஆத்திரத்தை வெளியிட்டுள்ளார்.
ஹெர்னாண்டஸ் தனது பாதுகாப்பில் இருந்து 11 மாத ஆண் குழந்தை மற்றும் அதனது சகோதரியை தலையில் தாக்கியுள்ளார். அதில் குழந்தை இறந்துள்ளது. எனினும் பல மத நம்பிக்கையாளர்களும் தனது கடைசி வார்த்தையாக யேசு, அல்லாஹ் அல்லது சிக் குரு என்று உச்சரித்துள்ளனர்.

(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/09/?fn=w1307097 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE