......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 7 July 2013

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள்: தேசிய திட்டங்களைக் கொண்ட இணையத்தளம் அங்குரார்ப்பணம்

www.llrcaction.gov.lk

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான தேசிய திட்டங்களைக் கொண்ட இணையத்தளமொன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

www.llrcaction.gov.lk  என்ற இணையத் தளத்தின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவது தொடர்பான விடயங்களை அறிந்துகொள்ள முடியுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் நிலையில், அந்த செயற்பாடுகளின் நிலைப்பாடுகளை அறிந்துகொள்வதற்கான இணையத்தளமொன்றின் தேவை இருப்பதாக இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க குறிப்பிட்டார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் 53 பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கியிருந்தது. இந்த நிலையிலேயே பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பான தேசியத் திட்டத்தின் செயற்பாடுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணையத்தளமொன்றை அரசாங்கம் அங்குரார்ப்பணம் செய்துள்ளது.
2002ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு மேமாதம் வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றியும், அதனால் கற்றுக்கொண்ட பாடங்கள் பற்றியும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 2010ஆம் ஆண்டு எட்டுப் பேர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நியமித்திருந்தார்.
இந்த அறிக்கை 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வதற்கு சட்டமா அதிபர் தலைமையில் ஆலோசனைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான தேசிய செயற்திட்டத்துக்கு 2012ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது. (ர-து)

(மூலம்: http://www.thinakaran.lk/Vaaramanjari/2013/07/07/?fn=n1307075 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE