அவருடன் ஐக்கிய தேசியக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான அசோக அபேசிங்கவும் இணைந்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தங்களுடைய குழுவில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் மனைவியான அனோமா பொன்சேகாவை முதன்மை வேட்பாளராக களமிறக்குவதற்கு முயன்றதாகவும் அதற்கு பொன்சேகா மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து இன்றுக்காலை நாடுதிரும்பிய அவர், தனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கட்சி அறிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவிடம் நான் மன்னிப்பு கோரவேண்டியதில்லை என்றும் கட்சியை சின்னாபின்னமாக ஆக்கியதையிட்டு அவரே கட்சி ஆதரவாளர்களிடம் மன்னிப்பு கோரவேண்டுமென்றும் தெரிவித்த அவர், ரணில் விக்ரமசிங்கவுக்கு நான் கடிதமெதனையும் அனுப்பவில்லை என்றும் தெரிவித்தார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/75927-2013-07-22-09-00-12.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.