1969 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி ஒரு கால் பந்தாட்டத்தின்போது இரண்டு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக எல் சல்வடார் (El Salvador), ஹோண்டுராஸ் (Honduras) ஆகிய இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டது.
1969 ஆம் ஆண்டில் நடந்த கால் பந்தாட்டப் போட்டியில் உலகக் கோப்பையைப் பெற உலக நாடுகள் கடுமையாக போட்டியிட்டன. அப்போது நடந்த போட்டியில் எல் சால்வடார், ஹோண்டுராஸ் அணிகள் மோதின. ஆட்டம் முடிவதற்கு சில நிமிடம் வரை இரண்டு நாடுகளும் இரண்டு கோல் (Goal) போட்டு சமநிலையில் இருந்தன.
அப்போது ஹோண்டுராஸ் அணியைச் சேர்ந்த ஓர் ஆட்டக்காரர் முரட்டுத்தனமாக விளையாடியதற்காக எல் சால்வடார் அணிக்கு தண்டனையாக பந்தை உதைக்கும்படி (Penalty Kick) நடுவர் தீர்ப்பு வழங்கினார். இதன் காரணமாக எல் சால்வடார் அணி மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அப்போது அங்கு இருந்த இரண்டு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களுக்கிடையே கலவரம் வெடித்தது.
இது இரண்டு நாடுகளின் மக்களிடையேயும் பரவியது. இரு நாடுகளின் தலைவர்களும் ஒருவரையொருவர் குறை கூறி அறிக்கைப் போரில் ஈடுபட்டு வந்தார்கள்.
ஜுலை மாதம் மூன்றாம் திகதி இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது.
ந்தப் போரில் 2000 போர் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்கா இந்த இரு நாடுகளுக்கும் கொடுத்து வந்த உதவிகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டது. இரு நாட்டு மக்களுக்குத் தேவையான உணவு கிடைக்காததனால், மேலும் பலர் பட்டினியால் இறந்து போனார்கள்.(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/02/?fn=k1307024 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.