......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 15 July 2013

இலங்கையில் இன்று உணவுக்காகவே அதிக வரி அறவிடப்பட்டு வருகின்றது : இதுவா ஆசியாவின் ஆச்சரியம்?

இலங்கையில் இன்று உணவுக்காகவே அதிக வரி அறவிடப்படுகின்றது. இதுதான் அரசாங்கம் கூறிய ஆசியாவின் ஆச்சரியமா? இன்று மக்களின் வருமானத்தை விட செலவு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம் ஆசியாவின் ஆச்சரியம் பற்றி கதை கூறிக் கொண்டிருக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி. சில்வா தெரிவித்தார்.

இராஜகிரியவில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்று இலங்கையில் அறவிடப்படும் வரிகளில் உணவுக்காகவே அதிக வரி அறவிடப்படுகின்றது. கடந்த ஆண்டின் அறிக்கையின் அடிப்படையில் உணவுக்கான வரி 39 வீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்வாறு சாதாரண மக்களின் அடிப்படை தேவைகளிலேயே அரசாங்கம் வரி அறவிட்டுக் கொண்டுள்ளது.

மேலும் மக்களின் வருமானம் இன்று 5.4 வீதமாக உள்ள அதேவேளையில் செலவானது 8.5 வீதமாகக் காணப்படுகின்றது. ஆனால் அரசாங்கம் ஆசியாவின் ஆச்சரியமாக நாட்டை மாற்றுவதாக கூறிக் கொண்டிருக்கின்றது.

அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்றது. ஆனால் உள்நாட்டு வீட்டுப் பொருளாதாரமானது மிகவும் தாழ் மட்டத்தில் உள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்தினால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளுடன் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டின் தலா வீட்டு வருமானத்தை விடவும் செலவு இருமடங்கு அதிகரித்துள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கமே இது தொடர்பாக கவனம் செலுத்தவில்லை.

யுத்தம் முடிவடைந்து இன்று வரையில் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் அடிமட்டத்திலேயே காணப்படுகின்றது. மஹிந்த சிந்தனையில் நாட்டின் அபிவிருத்தி மக்களின் வாழ்வாதாரம் விவசாயிகளின் உர மாணியம் என வார்த்தைகளில் மக்களை ஏமாற்றி இன்று எதையும் நடைமுறைப்படுத்தாது உள்ளது.

நாட்டின் பொருளாதார மற்றும் தலா வீட்டு வருமானத்தில் வீழ்ச்சி கண்டுள்ள நிலைமையில் நாட்டில் அநாவசிய செலவுகளைக் குறைத்துக்கொண்டு மக்கள் பற்றி அரசாங்கம் சிந்திப்பது சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.


(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5868 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE