......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 24 July 2013

தயாசிறி அரசாங்கத்தில் இணைவு?

ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று புதன்கிழமை அரசாங்கத்துடன் இணைந்துகொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தனர். 

இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையினை ஆற்றிய பின்னர் அரச பக்க ஆசனத்திலும் அமரவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. 

தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணையும் பட்சத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வட மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.   


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/76151-2013-07-24-05-09-33.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE