......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 11 July 2013

சவூதியில் ரமழானை மதிக்காதவர்களை நாடு கடத்துவதாக எச்சரிக்கை

புனித ரமழான் நோன்பு மாதத்தில் பொது இடங்களில் உண்பது, குடிப்பது அல்லது புகைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு பணியாளர்கள் நாடு கடத்தப்படுவர் என சவூதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சவூதியில் நேற்று ரமழான் ஆரம்பமானது. “முஸ்லிம் அல்லாதோர் ரமழான் காலத்தில் பொது இடங்களில் உண்ண அல்லது குடிக்கக் கூடாது. புனித ரமழானையும், முஸ்லிம்களின் உணர்வையும் மதித்து நடக்க வேண்டும்” என சவூதி உள்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாட்டினர் பொது இடங்களில் நோன்பை முறிக்கும் வகையில் செயற்பட்டால் அவர்களது தொழில் ஒப்பந்தங்கள் ரத்துச் செய்வது மற்றும் நாட்டைவிட்டு வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் வளம் கொண்ட சவூதியில் சுமார் 8 மில்லியன் வெளிநாட்டுப் பணியாளர்கள் உள்ளனர்.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/11/?fn=w13071110 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE