ஒலுவில் துறைமுகத்தின் திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு மீன்பிடி அமைச்சருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகத்தை விரைவில் திறக்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்த துறைமுகத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருந்தார்.
எனினும் ஜூலை மாதம் புனித நோன்பு ஆரம்பமாகின்றமையினால் திறப்பு விழாவை ஓகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் மீண்டும் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, இந்த திறப்பு விழாவினை ஓகஸ்ட் மாதத்தில் நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்தார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/72255-2013-06-25-07-15-09.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.