......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 29 June 2013

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் - வெள்ளிக்கிழமை காலை பல்கலைக்கழக வளாகத்தினுள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டமையைக் கண்டித்தும் குறித்த மாணவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறத்தியுமே மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பகிடிவதையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டினை முன்வைத்தே, குறித்த மாணவருக்கு நிர்வாகம் வகுப்புத் தடை விதித்துள்ளதாக அறிய முடிகிறது. வகுப்புத் தடை விதிக்கப்பட்டவர் கமலஸ்ரீ எனும் சிங்கள மாணவராவார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து முன்னேறுவதற்கு முயற்சித்தபோது, பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை மூடி பொலிஸார் தடுத்தனர்.
மாணவர்கள் முன்னேறுவதைத் தடுக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிற் கதவினை பொலிஸார் மூடியதால், பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் வாயிற் கதவுக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதை அவதானிக்க முடிந்தது.

இதன்போது பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆதரவு சேவைக்கு எதிராகவும் மாணவர்கள் சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.

(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5557 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE