பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னா தங்கியிருந்த வீடு பாகிஸ்தான் மாகாணம் தலைநகர் குவெட்டா அருகேயுள்ள ஷியாரத் நகரில் உள்ளது. குயாத்-இ-ஆசம் என பெயரிடப்பட்டுள்ள இந்த வீடு நினைவு சின்னமாக இருந்து வந்தது.
இந்த நிலையில், இந்த வீடு நேற்று நள்ளிரவு 1.15 மணியளவில் தீவிரவாதிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
இதனால் அந்த வீட்டின் பெரும்பாலான பகுதிகள் இடிந்து தரை மட்டமாயின. குண்டு வெடித்ததால் வீடு தீப்பிடித்து எரிந்தது. உடனே தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். சம்பவம் நடந்த ஷியாரத் நகரில் தீயணைப்பு நிலையம் இல்லை. எனவே, குவெட்டாவில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வந்தன.
இதனால், தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. எனவே, அந்த வீட்டில் முகமது அலி ஜின்னாவின் நினைவு சின்னங்கள் மற்றும் மரசாமான்கள் எரிந்து நாசமாயின. குண்டுகளை வெடிக்க செய்த தீவிரவாதிகள் அங்கு பணியில் இருந்த போலீஸ் காரர்களை துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார்.
குண்டு வெடித்த இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து 6-க்கும் மேற்பட்ட குண்டுகளை செயல் இழக்க செய்தனர். அவை தலா 3 கிலோ எடை இருந்தன. அதே நேரத்தில் ஏற்கனவே 4 குண்டுகள் வெடித்து இருந்தன. இந்த தகவலை மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி அஸ்கார் அலி தெரிவித்தார்.
இதற்கிடையே, குண்டு வைத்து தகர்க்கப்பட்ட ஜின்னாவின் வீடு டெலிவிஷனில் காட்டப்பட்டது. அப்போது, அது பலத்த சேதமடைந்து செங்கற்குவியலாக கிடந்தது. இந்த வீடு 121 ஆண்டுக்கு முன்பு, அதாவது 1892-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதை கோடை கால விடுதியாக இங்கிலாந்து கவர்னர் ஜெனரலின் பிரதிநிதி பயன்படுத்தி வந்தார்.
இந்த வீடு 1892ம் ஆண்டு கட்டப்பட்து. கோடை காலத்தில் இங்கிலாந்து கவர்னர் ஜெனரல் இந்த வீட்டில்தான் தங்கியிரு்பார்.
பாகிஸ்தான் சுதந்திரத்துக்கு பிறகு தனது இறுதி காலத்தை முகமது அலி ஜின்னா இங்கு தான் கழித்தார். காசநோயால் அவதிப்பட்ட அவர் இறந்த பிறகு இந்த வீடு நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் சுதந்திரத்துக்கு பிறகு தனது இறுதி காலத்தை முகமது அலி ஜின்னா இங்கு தான் கழித்தார். காசநோயால் அவதிப்பட்ட அவர் இறந்த பிறகு இந்த வீடு நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டது.
(மூலம்: kattankudyinfo.com)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.