உலகில் அதிகளவான வாசகர்களைக் கொண்டுள்ள டைம் சஞ்சிகை சஞ்சிகையின் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி வெளியீட்டில் பௌத்த தேரரொருவர் பயங்கரவாதியாக சித்தரிக்கப்படவுள்ளமை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“‘The Face of Buddhist Terror’ “என்ற தலைப்பிடப்பட்டுள்ள முன்னட்டைச் செய்தியில் தற்போது மியன்மாரில் இடம்பெற்று வரும் பௌத்த – முஸ்லிம் வன்முறைகளுக்கு தலைமை தாங்கும் விராது எனும் தேரரை மியன்மாரின் பின்லேடன்
என தெரிவிக்கப்பட்டுள்ளது
என தெரிவிக்கப்பட்டுள்ளது
“969 பௌத்த தேசியவாத முன்னணி” என்ற பெயரில் அமைப்பொன்றை உருவாக்கி அந்த நாட்டு பௌத்த மக்களுக்கு மதவாத சிந்தனையை கொண்டு சென்ற அந்த பௌத்த பிக்கு தொடர்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பது பௌத்த மதத்திற்கு ஏற்படுத்தப்பட்ட அபகீர்த்தி என மியன்மார் ஜனாதிபதி தெயின் சீன் ஞாயிரன்று (23) வெளியிட்ட விஷேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். “பர்மா என்ற மியன்மார் பௌத்த மதம் தொடர்பில் நீண்ட வரலாற்றையும் நல்லிணக்கத்தையும் கொண்ட நாடு” எனவும் “இவ்வாறான முறையில் ஊடகங்கள் மூலமாக அடிப்படைவாத மத விடயமாக உலகிற்கு காட்ட முனைவது விடயத்தின் உண்மைத் தன்மை பற்றித் தெரியாத ஒருவரின் செயல்” என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி “இவ்வாறு பௌத்த சம்பிரதாயங்களை இருட்டடிப்புச் செய்வதை சீர்செய்வதற்கு உடனடியாக
நடவடிக்கை எடுக்குமாறும்” கோரியுள்ளார்.
நடவடிக்கை எடுக்குமாறும்” கோரியுள்ளார்.
விராது என்ற இந்த பௌத்த பிக்கு அடிப்படையில் சட்ட விரோத செயல்களில் மக்களை ஈடுபடத்தூண்டி மியன்மாரில் முஸ்லிம் விரோதப் போக்கினை ஏற்படுத்தியமைக்காக 2003ஆம் ஆண்டு பொலீஸாரால் கைது செய்யப்பட்டு 25 ஆண்டு
கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். எனினும் கடந்த 2012 ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முயற்சியினால் பிக்கு விடுதலையானார். அதன் பின்னர் மீண்டும் செயற்பாட்டில் இறங்கிய அவர் மீண்டும் முஸ்லிம் விரோதப் போக்கினைப் பரப்பினார்.
கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். எனினும் கடந்த 2012 ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முயற்சியினால் பிக்கு விடுதலையானார். அதன் பின்னர் மீண்டும் செயற்பாட்டில் இறங்கிய அவர் மீண்டும் முஸ்லிம் விரோதப் போக்கினைப் பரப்பினார்.
969 முன்னணி மூலம் கடந்த கால முஸ்லிம் விரோத அலை மியன்மாரில் ஏற்படுத்தப்பட்டதோடு 2012 ஜுலை மாதம் ரொஹிங்கியா பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் 167 பேர் உயிரிழந்ததோடு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களின் வீடுகள், சொத்துக்கள் என்பன அழிக்கப்பட்டன.
2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முஸ்லிம்களின் வர்த்தகம் மற்றும் வியாபார நிறுவனங்களைப் புறக்கணிக்கும் கோஷத்தை கொண்டு வந்ததும் இந்த 969 முன்னணிதான்.
டைம் சஞ்சிகையில் தனக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அகௌரவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிக்கு விராது ” சேற்றினை வாரி இறைப்பதனால் மாணிக்கத்தின் பிரகாசத்தை நிறுத்திவிட முடியாது…. இந்த அறியாமைச் செயல் தொடர்பில் பொறுமையாக இருக்க வேண்டும்….இப்படியான தலைப்பில் டைம் சஞ்சிகையில் ஆக்கம் வெளியாகி இருப்பது அரபு ஊடகங்களின் அழுத்தங்களின் மூலமேயாகும் ” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முன்னட்டைப்படம் 2013 ஜுலை மாதம் முதலாம் திகதி வெளியிடப்படவுள்ள டைம் சஞ்சிகையின் ஐரோப்பா மத்திய கிழக்கு ஆபிரிக்கா ஆசியா மற்றும் தென் பசுபிக் வலயங்களுக்கான வெளியீட்டில் காணப்படுகிறது எனினும் அமெரிக்க வலயத்திற்கான வெளியீட்டில் வேறு முன்னட்டைப்படம் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதனிடையே பேஸ்புக் சமூக வலைத் தளத்தில் இந்த முன்னட்டைப்படத்தின் தவறான கருத்துக்கு எதிர்ப்பினை வெளியிடுவதற்கான பக்கமொன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்கள் அப்பக்கத்திற்குச் சென்று தமது எதிர்ப்பினை பதிவு செய்யவும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.(gossiplanka)
(மூலம்: kattankudyinfo.com )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.