இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையோன தந்திரோபாய உறவு மற்றும் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் குறித்த தொலை நோக்கு விளைவுகளை நன்கு ஆராய்ந்த பின்னரே இலங்கைக்கு எதிரான எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்தியாவின் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறைக்கான இணையமைச்சர் ஈ.எம். சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்திய இராணுவ வசதிகளைப் பயன்படுத்தி இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோரின் மனோ உணர்வுகளை நான் மதிக்கின்றேன். ஆயினும் இந்தியா அவர்களுக்கு முதுகைத் திருப்பினால் அவர்கள் சீனாவையே அணுகுவதற்கு விருப்பம் கொள்வரென்பதை நீங்கள் மறுக்கக் கூடாது. இலங்கையின் நெருங்கிய அண்டை நாடென்ற வகையில் ‘‘இது இந்தியாவுக்கு நல்ல சகுனமாக இருக்காது’’ .
பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டுள்ள எல்லைப் புறங்களில் இந்தியா ஏற்கனவே பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் பாக்கு நீரினைப் பகுதியில் அமைதியைக் குலைக்கக்கூடிய நிலைவரமொன்றை உருவாக்க இந்தியா விரும்பவில்லையெனவும் கூறிய நாச்சியப்பன்.
இலங்கைக்கு எதிரான எந்தத் தீர்மானமும் இலங்கைத் தமிழர்கள மற்றும் இந்தியாவில் வாழ்ந்துவரும் தமிழ் அகதிகள் மீது நேரடியான தாக்கமொன்றைக் கொண்டிருக்கவே செய்யுமெனவும் தமிழ்நாட்டில் போதியளவு உட்கட்டமைப்பு வசதிகள் இருந்திருந்தபோதிலும் கடந்த காலத்தில் இலங்கையில் தோன்றியிருந்த யுத்த நிலைமைகள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கைத்தொழில் வளர்ச்சியில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன எனவும் குறிப்பிட்டார்.
கைத்தொழில் அபிவிருத்திக்கென அமைதியான சூழல் கொண்ட அயல் நாடொன்றைக் கொண்டிருத்தல் அவசிமென்பதை வலியுறுத்திய அவர், தென் மாவட்டங்களில் வர்த்தக முதலீடுகளை மேற்கொவதற்கு கைத் தொழில் அதிபர்கள் அச்சங் கொண்டிருந்ததாகவும் தூத்துக்குடியில் துறைமுகமொன்றும் மதுரையில் சர்வதேச விமான நிலையமொன்றும் தூத்துக்குடியில் இன்னுமொரு விமான நிலையமும் இருந்த போதிலும் தங்களால் முதலீட்டைக் கவர்ந்து கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5489 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.