......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 9 January 2013

அல்‍-குர்ஆனிய சமுதாயம்

ஆக்கம்: மதனியா (அல்குர்ஆன் கற்கை வகுப்பு மாணவி)
அல்லாஹுத்தஆலா காலத்திற்குக் காலம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுவதற்காக வேண்டி அச்சமூகத்திலிருந்தே நல்ல மனிதர்களை தூதர்களாகத் தேர்வு செய்தான். அந்தத் தூதர்களுக்குச் சான்றாக அற்புதங்களை வழங்கினான்.
அந்த வகையில் எமது சமுதாயத்திற்கு முஹம்ம‌து(ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். அவர்களுக்கு அல்லாஹ்வால் ‘அல்குர்ஆன்’எனும் அற்புதம் வழங்கப்பட்டது.
இந்த அற்புதம் இறக்கப்பட்ட காலம் எப்படியானதெனில் ‘ஜாஹிலிய்யா’ எனும் அறியாமைக் காலம். அந்த அறியாமைக்கால மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் பல கடவுள் நம்பிக்கை உடையோராக இருந்தார்கள். ஏறாளமான மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடந்தார்கள். கடவுளை நிர்வாணமான முறையில் வழிபட்டார்கள். குடம் குடமாக மது அருந்தினார்கள். காமக்கழியாட்டங்களில் மூழ்கிக் கிடந்தார்கள். பெண்களை ஆடு, மாடுகளைப் போன்று நடத்தினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தார்கள்.
சாதி, குலம் வேற்றுமை தலைவிரித்தாடியது. பழிவாங்கும் தன்மை மிகைத்துக்காணப்பட்டது. இவ்வாறு தீமைகள் பல நிறைந்த கொடியசமுதாயமாக அச்சமுதாயம் காணப்பட்டது.
இந்த அல்குர்ஆன் அருளப்பட்ட பின் எவ்வாறு அச்சமூகத்தின் நிலை மாறியதெனில் எத்தனையோ குரைஷிக்காபிர்களை இம்மார்க்கத்தின் பால் ஈர்த்தது. நபிகளாரைக் கொல்ல வேண்டுமென அடம்பிடித்த அந்த சமுதாயத்தின் பெரும் தலைவர்களுல் ஒருவரான உமரை அல்லாஹ்வின் தூதரின் அருமைத்தோழராக மாற்றிக்காட்டியது. அன்று பகைவர்களாக இருந்த இருபெரும் கோத்திரத்தார்களை ஒற்றுமையாக ஆக்கி சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்பியது இந்த அருள்மறைக் குர்ஆன்.
இவ்வாறு இஸ்லாமியப் பேரரசை உருவாக்கிய இந்த அல்குர்ஆனின் தனித்தன்மை யாதெனில் இது ‘காலத்தால் முரண்படாத’ தன்மைகொண்டது. இதனை அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகையில்
‘அவர்கள் அல்குர்ஆனை சிந்திக்கமாட்டார்களா? இது அல்லாதவர்களிடமிருந்து வந்திருந்தால் அதில் ஏறாளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.’
இதே போன்று அல்குர்ஆனில் பொய்புரட்டுக்கள் இல்லை. கற்பனைக்கலவை இல்லை. எவ்விதமான மழுப்புதலோ, நழுவலோ இல்லை. இவ்வாறு உண்மைகளை உரைக்கும் உன்னதமான வேதம் அல்குர்ஆன். அன்றைய பெரும் பெரும் இலக்கிய மேதைகளையே பிரமிக்கவைத்தது இந்த அல்குர்ஆன். ஆனால் இலக்கியத்தரத்தில் அமைந்த அல்குர்ஆன் படிப்பறிவில்லாத பாமரமக்களுக்கும் விளங்கும் வகையில் அருளப்பட்டது. மிக உயர்ந்த இலக்கியமாகத் திகழும் எந்த இலக்கியமும் சாதாரமக்களுக்கு புரியம் வகையும் அதன் வாசகங்கள் அமைந்திருப்பதில்லை.ஆனால் அல்குர்ஆன் யாவருக்கும் புரியும் தெய்வீகத்தன்மை கொண்டிருப்பதை இஸ்லாத்தின் எதிரிகளே கண்டு வியக்கின்றனர்.
பல்வேறு ஆராய்ச்சிகளிலும் பொய்களுக்கும் முரண்பாடுகளுக்கும் உடன்பாடில்லாத உயர்ந்த ஒரே வேதம் அல்குர்ஆன் மாத்திரமே என்பது மிகத்தெளிவாக நிறூபணமாகியுள்ளது. இவ்வாறு சிறந்த அற்புதமாக விளங்கும் அல்குர்ஆன் விஞ்ஞான உண்மைகளைக் கொண்டும் இறைவேதம் என்பதற்கான உறுதியைக் காட்டுகின்றது.
திருப்பித்தரும் வானம் என அல்குர்ஆன்(86:11) இல் குறிப்பிடுகின்றது. இது எப்படி என்று ஆராய்ந்தால் வானம் கடலிலிருக்கும் நீரை மேற்காவுகை மூலம் மேகம் உருஞ்சி கடல் நீரை நன்னீராகப் பொழிகின்றது. இதை அல்குர்ஆன் இற்றைக்கு ஆயிரத்தி நானூறு ஆண்டுகளுக்கு முன்பே முன்னறிவிப்புச் செய்துவிட்டது. ஆனால் இன்றைக்குத்தான் மனிதன் இப்பேருண்மையைக் கண்டுபிடித்துள்ளான்.
அதேபோன்று அல்குர்ஆன்(4:56) வ‌து வ‌ச‌ன‌த்தில் ந‌ர‌கில் நுழைப‌வ‌ர்க‌ளின் தோல்க‌ள் க‌ருகும் போதெல்லாம் அவ‌ர்க‌ள் வேத‌னையை உண‌ர்வ‌த‌ற்காக‌ வேறு தோல்க‌ளை மாற்றுவோம் என‌க்கூறுகின்ற‌து. அதாவ‌து வேத‌னையை உண‌ரும் உறுப்பாக‌ அல்குர்ஆன் தோலைக் கூறுகின்றது. பல நூற்றாண்டு காலமாக மூளை மட்டும்தான் நோவை உண்ரும் உறுப்பென்று விஞ்ஞானம் கருதி வந்தது, மிக அண்மையில்தான் தோலில் உள்ள குறிப்பிட்ட செல்களும் வலியை உணருகின்றன என்பது கன்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு அறிவிய‌ல் ரீதியாக சிந்திக்க‌க்கூடிய‌ வித‌மாக‌ அமைந்துள்ள‌ அல்குர்ஆன் அதிக‌மாக‌ ம‌னித‌ உள்ள‌ங்க‌ளில் இட‌ம்பிடித்த‌தாக‌த் தெரிய‌வில்லை. அத‌ற்கு மாற்ற‌மாக ம‌னித‌ உள்ள‌ங்க‌ளில் உல‌கிய‌ல் ரீதியான‌ அம்ச‌ங்க‌ளே அதிக‌ம் இட‌ம்பிடித்துள்ள‌மை இங்கு குறித்துப்பேச‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விட‌ய‌மாகும். எங்கு பார்த்தாலும் சீர‌ழிவுக‌ள் ப‌ர‌ந்து காண‌ப்ப‌டுகின்ற‌ன. சீர‌ழிவுக‌ளில் சிக்கிய‌ ம‌க்க‌ள் வாழ்க்கையில் நிம்ம‌தியை இழ‌ந்து த‌விக்கின்ற‌ன‌ர்.
க‌லாச்சார‌ச் சீர்கேடுக‌ளுக்கெல்லாம் பிர‌தான‌ சீர‌ழிவாக‌த்திக‌ழ்வ‌து சினிமா சீரிய‌ல்க‌ளே! அது இன்று ஒவ்வெரு வீடுக‌ளுக்குள்ளும் புகுந்துவிட்ட‌து. இன்று எம‌து ச‌கோத‌ரிக‌ளின் வீடுக‌ளில் திரும‌றைக்குர்ஆன் ஏறெடுத்தும் பார்க்க‌ப்ப‌டுவ‌தில்லை. மாறாக‌ மாலைநேர‌மாகிவிட்டால் வீடுக‌ளில் குடும்ப‌ ச‌கித‌மாக‌ உட்கார்ந்து த‌ங்க‌ளையே ம‌ற‌ந்து க‌ண்னீர்விட்ட‌ழும் காட்சிக‌ளை எம‌து முஸ்லிம் ச‌கோதர, ச‌கோத‌ரிக‌ளிட‌ம் தின‌மும் க‌ண்டுவ‌ருகின்றோம். இன்னும் சில‌ முஸ்லிம் யுவ‌திக‌ள் அல்குர்ஆனை ம‌ற‌ந்துவிட்டு நாவ‌ல்க‌ளிலும், க‌தைப்புத்த‌க‌ங்க‌ளிலும் சினிமா ஆபாச‌ப்ப‌த்திரிகைக‌ளிலும் மூழ்கிக்கிட‌க்கின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளெல்லாம் பெய‌ர்க‌ளிலேயே முஸ்லிம்க‌ளாக‌ வாழ்கின்ற‌ன‌ர் என்றால் பிழையில்லை.
அல்குர்ஆனை ஏறெடுத்தும் பார்க்காத‌ ந‌ம‌து ச‌கோதர, ச‌கோத‌ரிக‌ள் என்ன‌ நினைக்கின்றார்க‌ள் தெரியுமா? ‘அல்குர்ஆனை நாம் விள‌ங்க‌முடியாது அது ஆலிம்க‌ளுக்கு மாத்திர‌மே புரியும்’ இவ்வாறான‌ பிழையான‌ அனுமான‌ங்க‌ளே ஒவ்வெரு கால‌க‌ட்ட‌த்திலும் வாழ்ந்த‌ க‌னிச‌மான‌ பொதும‌க்க‌ளை மார்க்க‌ விட‌ய‌த்தில் க‌ண்மூடிப் பின்ப‌ற்ற‌ வைத்த‌து. இஸ்லாத்தில் வெறுக்க‌ப்ப‌ட்ட‌ ‘த‌க்லீத்’ எனும்(குருட்டுத்த‌ன‌மாக‌ப் பின்ப‌ற்ற‌ல்) எம‌து ச‌மூக‌த்தில் த‌லைவிரித்தாடுவ‌த‌ற்கு அடிப்ப‌டைக்கார‌ணி என்ப‌தை சான்றோர் மிக‌த்தெளிவாக‌ப் புரிந்துகொள்வ‌ர்.
அறிவு பூர்வ‌மான‌ அல்குர்ஆனை விட்டு யாரோ எழுதிய‌ புராண‌ங்க‌ளை வேத‌மாக‌ ப‌ள்ளிவாய‌ல்க‌ளிலும், த‌ங்க‌ள‌து வீடுக‌ளிலும் வாசிக்கும் முஸ்லிம்க‌ள் அல்லாஹ்வை அதிக‌ம் அஞ்சிக்கொள்ள‌ வேண்டும். தின‌மும் ஓத‌ப்ப‌ட‌வேண்டிய‌ அல்குர்ஆனை முஸ்லிம்க‌ளில் பிற்போக்கு சிந்த‌னைவ‌திக‌ளால் அர‌ங்கேற்ற‌ப்ப‌டும் ‘ப‌ராத் இரவு பெரிய‌ வெள்ளி ஒடுக்க‌த்துப்புதன் மிஃராஜ் இர‌வு’ போன்ற‌ நாற்க‌ளிலும் யாராவ‌து முஸ்லிம்க‌ள் ம‌ர‌ணித்தால் அந்த‌த்தின‌ங்க‌ளிலும் ஓத‌ப்ப‌டும் அவ‌ல‌நிலையை இன்று க‌ண்கூடாக‌க் காணுகின்றோம்.
என‌வே வாழும் அற்புத‌மான‌ இக்குர்ஆனை தின‌மும் ஓதுவ‌தாலேயே ப‌ல்வேறு நோய்க‌ள் சுக‌மாகின்ற‌ன. பாழ்ப‌ட்டுப்போன‌ அந்த‌ ஜாஹிலிய்ய‌ ம‌க்க‌ளின் வாழ்வையே ஒரு முறை புர‌ட்டிப்போட்ட‌ அல்குர்ஆன் இன்றும் ப‌ல்வேறு ம‌னித‌ர்க‌ளின் வாழ்வில் ஆதிக்க‌ம்செலுத்துவ‌தை நித‌ர்ச‌ன‌மாக‌ உண‌ர‌முடியும். அவ்வாரான‌ ஒரு சமூக‌ மாற்ற‌த்திற்கே பெரும் புள்ளியாக‌த்தென்ப‌டும் இக்குர்ஆனை நாமும் க‌ற்று, பிற‌ருக்கும் போதிது அல்குர்ஆனிய‌ ச‌முதாய‌மாக‌ மாறுவ‌த‌ற்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக‌!

(மூலம்:   )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE