கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தலைமையில் இந்தியாவின் கேரள மாநிலத்திற்கான விஜயத்தை மாகாண அமைச்சர்கள் நான்குபேர் பகிஷ்கரித்துள்ளனர்.
கேரள மாநில முதலமைச்சரின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தலைமயைில் மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று இரவு அங்கு பயணமாகவிருந்தது. எதிர்வரும் 7ஆம் திகதிவரை கேரளாவில் தங்கி இருப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படிருந்தது.
ஆனால் இந்த விஜயத்தினை கிழக்கு மாகாணசபை அமைச்சர்களான விமல வீர திஸாநாயக்க, எம்.ஐ.எம்.மன்சூர், எம்,எஸ்.உதுமாலெப்பை, காபிஸ் நஸீர் அகமட் ஆகியோர் பகிஷ்கரித்துள்ளனர். தமது முடிவு குறித்து முதலமைச்சருக்கு எழுத்து மூலம் இவர்கள் அறிவித்துள்ளனர்.
முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்துத் தெரிவித்தும் ஆளுநரின் தலையீடுகளை கண்டித்துமே அமைச்சர்கள் நால்லவரும் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் முலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாகாண அமைச்சரவைக் கூட்டத்தையும் மூன்று அமைச்சர்கள் புறக்கணித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே கேரள மாநிலத்திற்கான விஜயத்திலும் நான்கு அமைச்சர்களும் பங்கேற்கவில்லையென தெரிகின்றது.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=4996 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.