......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 29 June 2013

இராணுவ பயிற்சிகளை அதிகரிக்க பாக்.இலங்கை ஆராய்வு

பாகிஸ்தானில் இலங்கை படையதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் பயிற்சி திட்டங்களுக்கு அப்பால் மேலும் கூடுதல் பயிற்சி அளிக்கும் வாய்ப்புகள் பற்றி இலங்கையும் பாகிஸ்தானும் ஆராய்ந்துள்ளன.

பாகிஸ்தான் இராணுவத்தளபதி ஜெனரல் அஷ்பாக் பாவெஸ் கயானிக்கும் இலங்கை இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரியவுக்கும் இடையில் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்படி விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்குகள், இரண்டு நாடுகளிலுமுள்ள உயர்கல்வி வாய்ப்புகள் , இலங்கையின் இராணுவ பயிற்சி திட்டமான 'கொமொறன்'(நீர்க்காகம்) தொடர்பில் பேசப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு நாடுகளையும் சேர்ந்த இராணுவ அதிகாரிகளிடையே இருபக்க புரிந்துணர்வு மற்றும் நல்லெண்ணம் என்பவற்றை மேலும் விரிவாக்குவதுபற்றி முக்கியமாக பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/72813-2013-06-28-13-27-19.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE