......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 June 2013

கத்தாரில் அரசியல் அலுவலகம் தொடங்கும் தலிபான்கள்

Qatar Flag2001-ம் ஆண்டு அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதையடுத்து, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்த தலிபான்களை அமெரிக்கா தாக்கி அழித்தது.
அதன் பிறகு ஹமீத் கர்சாய் தலைமையில் அங்கு அரசு அமைந்தது. இந்த அரசுக்கு எதிராகவும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கு எதிராகவும் தலிபான்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.
போர் முடிவடைந்ததையடுத்து, அடுத்த இரு வருடங்களில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறுகிறது.
இந்நிலையில் அதிபர் கர்சாய் தலிபான்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் கட்சி தொடங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மேலும் அரபு நாடான கத்தார் நாட்டின் மன்னரை சந்தித்த கர்சாய், தலிபான்கள் அங்கு அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதற்கு தலிபான்கள் இந்த ஆண்டு தொடக்கம் வரை எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கத்தாரில் உள்ள தோஹாவில் தலிபான்கள் அரசியல் அலுவலகம் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது. இது தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

(மூலம்: kattankudyinfo.com)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE