பாகிஸ்தானின் கைபர் பாக்துன்கவா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் ஷியா பிரிவினரின் பள்ளிவாசல் ஒன்றின் மீது இன்று நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தின் போது வெள்ளிக் கிழமை தொழுகைக்காக சுமார் 200 பேர் அங்கு கூடியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது பள்ளிவாசலுக்குள் பின் வழியாக புகுந்த நபரொருவர் தனது உடலில் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் 14 பேர் பலியானதாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் அந்நகர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் பள்ளிவாசலின் கதவு , ஜன்னல்கள் மற்றும் அதன் கூரை முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இந்த பிரிவினைவாத தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஷுன்னி பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பாகிஸ்தானிஸ், 20 சதவீதத்தினர் மட்டுமே ஷியா பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் அங்கு அடிக்கடி இரு பிரிவினரிடையே மோதல்கள் இடம்பெற்று வருவதுடன், இதனால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துமுள்ளனர்.(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=740 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.