......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 2 June 2013

13ஆவது திருத்தச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசினால் சட்டமூலம்?

13ஆவது திருத்தச்சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை மற்றும் அதன் அதிகாரங்களை திருத்துவதற்கான சட்ட மூலமொன்றை அரசாங்கம் முன்வைக்கத் தயாராவதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் இன்னும் இரண்டு வாரங்களில் உத்தேச சட்டநகல் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா இச்சட்ட நகலை அமைச்சரவை அங்கீகாரத்துக்கு சமர்ப்பிப்பார் எனவும் இது தொடர்பாக அமைச்சர் அதாவுல்லாவுடன் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜாதிக ஹெல உறுமயவின் தனிநபர் பிரேரணையில் மாகாண சபை முறையை முற்றாக ஒழிக்கும் படி கோரப்பட்டிருந்த போதும் அரசின் உத்தேச திருத்தத்தில் மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்கும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=4973 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE