இலங்கையிலிருந்து ஏற்கனவே ஹஜ்ஜுக்கு சென்ற ஒருவர் பத்து வருடங்களுக்கு பின்பே அவர் மீண்டும் ஹஜ்ஜுக்கு செல்லமுடியுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.சமீல் நழீமி தெரிவித்தார்.
இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லவுள்ள ஹஜ்ஜாஜிகளுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.சமீல் நழீமி ஹஜ் கோட்டாவை கருத்திற் கொண்டு இலங்கையிலிருந்து பத்து வருடங்களுக்கு ஒரு முறை மாத்திரமே ஒருவர் ஹஜ்ஜுக்கு செல்லமுடியும் என்பதை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் திர்மானித்துள்ளது.
அதே போன்று பதில் ஹஜ்ஜுக்காகவும் செல்லமுடியாது இம் முறை இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்வதற்காக 7800 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் எமது இலங்கைக்கு சவூதி அரேபியா அரசாங்கம் 2800 பேருக்கு மாத்திரமே இவ்வாண்டு ஹஜ்ஜுக்கு செல்வதற்கான கோட்டா வழங்கப்பட்டுள்ளது.
இதை மைய்யப்படுத்தி சில நடைமுறைகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பின் பற்ற தீர்மானித்துள்ளது.
அதில் இவ்வாண்டு ஹஜ்ஜுக்கு செல்ல விண்ணப்பித்தவர்களில் புதிதாக செல்பவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குகுதல், அதே போன்று முதியவர்களுக்கு முன்னுரிமையளித்தல் போன்ற நடைமுறைகளையும் எமது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
கடந்த வருடம் ஹஜ்ஜுக்காக செல்வதற்கு விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் இம் முறை சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும்.
இம் முறை ஹஜ் பிரயாணம் மேற் கொள்ளவுள்ளவர்களுக்கான கட்டணம் பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. கடந்த வருடம் சில முகவர்கள் கூடிய பணங்களை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் சகல முவர்களையும் வைத்து கலந்துரையாடலை மேற் கொண்டு இதற்கான கட்டணம் தீர்மானிக்கப்படும். சில முகவர்கள் அவர்கள் ஹாஜிகளுக்கு வழங்கும் விஷேட தேவைகளை கருத்திற் கொண்டும் கட்டணங்கள் அறவிடுவர்
ஏதும் பிரச்சினைகள் இருப்பின் அவைகள் தொடர்பில் எமக்கு அறிவித்தால் அவற்றை நாங்கள் கவனத்தில் கொள்வோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஜுனைத் நழீமி உட்பட திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஹஜ் முகவர்கள் கலந்து கொண்டனர்.(மூலம்: kattankudyinfo.com)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.