......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 29 May 2013

அல் அக்ஸா பாதுகாவலர் இஸ்ரேல் பொலிஸாரால் கைது

புனித அல் அக்ஸா பள்ளிவாசலின் பாதுகாவலர் ஒருவரை இஸ்ரேல் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். பள்ளிவாசல் வளாகத்திற்குள் யூத குடியிருப்பாளர்கள் தமது ஆன்மீக வழிபாட்டை செய்ய முற்பட்ட போது அதனை தடுத்த பாதுகாவலரையே பொலிஸார் கைது செய்ததாக அல் அக்ஸா வக்குப் (நம்பிக்கை) மற்றும் மரபுரிமைகளுக்கான சபை குறிப்பிட்டுள்ளது.

வக்குப் சபை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- நேற்றுக் காலை யூத குடியிருப்பாளர் குழுவொன்று அல் மகர்பா வாயிலூடாக இஸ்ரேல் பொலிஸாரின் காவலுடன் அல் அக்ஸா வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் யூத ஆன்மீக வழிபாட்டை செய்ய முற்பட்டபோது அல் அக்ஸா பாதுகாவலர் ஒருவர் அதனைத் தடுத்ததோடு அது குறித்து இஸ்ரேல் பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளார். ஆனால் இஸ்ரேல் பொலிஸ் மேற்படி பாதுகாவலரை கைது செய்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அல் அக்ஸா வளாகத்திற்குள் யூதர்கள் வழிபாடு நடத்துவது முஸ்லிம் வக்குப் சபை மற்றும் இஸ்ரேல் பொலிஸாருக்கு இடையிலான உடன்பாட்டை மீறும் செயலாகும்.
முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன் அழிக்கப்பட்ட தமது கோயில் இருந்ததாக யூதர்கள் குறிப்பிடுகின்றனர்.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/05/29/?fn=w1305295 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE