......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 28 May 2013

பலஸ்தீனத்தில் எக்வடோர் தூதரகம்

ஆக்கிரமிப்பு பலஸ்தீனத்தில் தூதரகத்தை திறக்க எக்வடோர் அரசு தீர்மானித்துள்ளது. பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்து இரண்டு ஆண்டுகள் கழித்தே எக்வடோர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

எக்வடோர் தலைநகர் குவைடோவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரிகார்ட் படினே மற்றும் பலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல் மல்கி இடையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோன்று எக்வடோரிலும் பலஸ்தீன தூதரகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பலஸ்தீனம் ஐ. நா. அங்கத்துவத்தை பெற 2011ஆம் ஆண்டு விண்ணப்பித்தபோது அதற்கு ஆதரவளித்து எக்வடோர், பலஸ்தீனத்தை சுதந்திர தேசமாக அங்கீகரித்தது. “பலஸ்தீன மக்களின் வரலாற்று போராட்டத்தையும் அது ஐ. நா.வில் பங்கேற்கும் உரிமையையும் நாம் ஏற்கிறோம்” என எக்வடோர் ஜனாதிபதி ரபெல் கொர்ரயா அப்போது குறிப்பிட்டிருந்தார்.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/05/28/?fn=w1305281 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE