......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 28 May 2013

தீர்மானத்தை நியூஸிலாந்து அறிவிக்கவில்லை: அமைச்சு

-கெலும் பண்டார

டீசிடீ எனும் நச்சு விவசாய பொருளை தனது நாட்டில் தடைசெய்வதற்கு நியூஸிலாந்து கடந்த செப்டெம்பர் மாதம் தீர்மானமொன்றை  எடுத்திருந்த போதிலும்  அது தொடர்பில் இலங்கைக்கு அறிவிக்கவில்லையென விவசாய அமைச்சுத்தகவல்கள் தெரிவித்தன.

நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவில் டீசிடீ கூடியளவில் இருப்பதனை இலங்கையின் ஆய்வுக்கூட சோதனைகள் வெளிப்படுத்தின.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை கிளப்பும் வரை இந்த பிரச்சினை தொடர்பில் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.

இதேபோன்ற பால்மாவை நுகர்வதில் உள்ள ஆபத்துக்கள் பற்றி உரிய அதிகாரிகள் மக்களுக்கு அறிவிக்கவும் இல்லை.
இந்த அபாயம் பற்றி தெரியவந்ததன் பின்னரும் ஒரு முன்னணி நிறுவனம் இப்படியான பால்மாவை இறக்குமதி செய்தது ஏன்? என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.

இது பற்றி இலங்கையிலுள்ள நுகர்வோர் அச்சம் கொள்ளத்தேவையில்லையென புதுடில்லியிலுள்ள நியூஸிலாந்து உயர் ஸ்தானிகராலயம் நேற்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/68612-2013-05-27-14-47-14.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE