......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 11 May 2013

ஆப்கானுடன் மீண்டும் பேச்சுக்காக கட்டாரில் அலுவலகம் திறக்கும் தலிபான்கள்

ghhh தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை நடத்துவது தொடர்பாக ஆராய்வதற்காக வளைகுடா நாடான கட்டாருக்கு இருநாள் விஜயத்தினை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமிட் ஹர்சாய் மேற்கொண்டுள்ளார்.
 கட்டாரில் தலிபான்கள் திறக்கவுள்ள அரசியல் அலுவலகம் தொடர்பாக இந்தப் பேச்சுவார்த்தையில் ஆராயப்படும் சாத்தியமுள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தலிபான்கள் மற்றும் ஆப்கான் அரசுக்கிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளுக்காகவே இந்த அலுவலகம் உருவாக்கப்படவுள்ளது. 2014 ஆம் ஆண்டு இறுதியில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க தலைமையிலான மேற்குலகத் துருப்புகள் வெளியேறவுள்ளன.
கடந்த வருடம் அமெரிக்க அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள் தீர்மானமின்றி முடிவடைந்ததுடன் தலிபான்கள் ஆப்கான் ஜனாதிபதி கர்சாயை அமெரிக்காவின் கைப்பொம்மை எனவும் வர்ணித்திருந்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் குடியிருப்புப் பகுதிகளில் வெளிநாட்டுப் படைகள் வான் தாக்குதல்களை மேற்கொள்வதை கர்சாய் கண்டித்திருந்தார். கட்டாரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு பாரிய ஒத்துழைப்பும் சமாதான முன்னெடுப்புகளும் இடம்பெறுமென கர்சாயின் அலுவலகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதேவேளை கட்டாரிலுள்ள அரசியல் அலுவலகத்திற்கும் கர்சாயுடனான பேச்சுக்கும் எவ்வித தொடர்புமில்லை எனவும் தலிபான்களுக்கும் கட்டார் அரசுக்குமிடையிலான பேச்சுவார்த்தையை நடத்தவே இந்த அலுவலகம் திறக்கப்பட்டதாக தலிபான்களின் பேச்சாளர் ஸாபிகுல்லா முஜாஹிட் தெரிவித்துள்ளார். ஏற்கனவே எங்களுடைய பிரதிநிதிகள் கட்டாரில் உள்ளனர்.
எங்களுக்கு அவரை (ஹர்சாய்) பார்க்க வேண்டியோ அல்லது பேச வேண்டியோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் சமாதான உடன்படிக்கையை 6 மாதங்களினுள் முன்னெடுப்பதாக ஹர்சாயும், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி ஸர்தாரியும் பெப்ரவரியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(மூலம்: http://voknews.com/?p=11264#more-11264 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE