நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் எட்டுவதற்கு வெறும் பொருளாதார அபிவிருத்தி மட்டும் போதாது என்று இலங்கையிடம் அமெரிக்கா கூறியுள்ளது.
அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்கா முகவரகத்தின், ஆசியப் பிரிவின் மூத்த பிரதி உதவி நிர்வாகியான டெனிஸ் ரோலின்ஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் இதனைக் கூறியுள்ளார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அவர் திருப்தி வெளியிட்டுள்ளார்.
'நல்லிணக்கத்தை அடைவதற்கு அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த பாரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இறுதியான சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் அடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமல், பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதால் பயனில்லை.
மனிதஉரிமை மீறல்கள் குறித்த வெளிப்படையான விசாரணைகளை நடத்தி பொறுப்புக் கூறவேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=3309 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.