By Hafeez
மூன்று மாதக் கைக்குழந்தை ஒன்றின் பிறப்புறுப்பில் சூடுபோட்டதாக சந்தேகிக்கப்படும் பணிப் பெண் ஒருவரை பிலியந்தலைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.
குறித்த பணிப் பெண் பொலன்நறுவையைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிலியந்தலையிலுள்ள வீடொன்றில் குறித்த பெண் பணி புரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கணக்காய்வாளரான வீட்டு எஜமானும், நிர்வாக சேவை அதிகாரியான அவர் மனைவியும் பணிப் பெணின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
அதன்பின்னர் குழந்தையை கலுபோவில வைத்திய சாலையில் அனுமதித்த போது எரி காயம் இருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.(மூலம்:http://www.virakesari.lk/article/local.php?vid=3284 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.