பொதுவாக முட்டையினுள் இரண்டு மஞ்சள் கருக்கள் இருப்பது மிகவும் அரிதாக கருதப்படுகின்றது.
ஆனால் இங்கிலாந்தில் பெண்ணொருவர் வாங்கிய 12 முட்டைகளிலும் இரண்டு மஞ்சள் கருக்கள் வீதம் இருந்துள்ளமை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது,
கிழக்கு லண்டனின், பொப்லர் பகுதியில் வசிப்பவர் மேகொக்(24). இவர் தனது காதலரான சேம் புல்லுடன் வசித்து வருகின்றார்.

சுப்பர் மார்க்கட் ஒன்றில் மேற்பார்வையாளராக கடமையாற்றி வருகின்றார் ஹேகொக்.
இவர் அண்மையில் 12 முட்டைகள் அடங்கிய பொதியொன்றை வாங்கியுள்ளார்.
பின்னர் அம் முட்டைகளிலிருந்து ஒன்றை எடுத்து சமைக்கும் பொருட்டு உடைத்துள்ளார்.முதல் முட்டையில் 2 மஞ்சள் கருக்களை கண்டவுடன் மேகொக் ஆச்சர்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இரண்டாவது, மூன்றாவது முட்டைகளை உடைத்த போதும் ஹேகொக் ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார் காரணம் அவற்றிலும் 2 மஞ்சள் கருக்கள் வீதம் இருந்துள்ளது.
பின்னர் 4,5,6 என வரிசையாக வந்த அனைத்து முட்டைகளிலும் இரண்டு கருக்கள் இருப்பதினைக் கண்ட அவர் அந்நாட்டின் பிரபல ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அவ் ஊடக நிறுவனத்திலிருந்து செய்தியாளரொருவர் ஹேகொக்கின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பின்னர் அவர்பொதியில் இருந்த மற்றைய 6 முட்டைகளையும் உடைத்துப் பார்த்துள்ளார். அவற்றிலும் 2 மஞ்சள் கருக்கள் வீதம் இருந்துள்ளது.

இங்கிலாந்தில் 1000 முட்டைகளில் ஒன்றிலேயே 2 மஞ்சள் கருக்கள் இருக்குமாம் ஆனால் இவரது 12 முட்டைகளிலும் 2 மஞ்சள் கருக்கள் வீதம் இருந்துள்ளன.
இச் செய்தியானது அங்கு அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது.(மூலம்: http://www.virakesari.lk/article/interesting.php?vid=83 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.