......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 19 March 2013

ஜெனீவாவில் ஆதரவு திரட்டும் கடும் பிரயத்தனத்தில் இலங்கை

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு ஆதரவை திரட்டும் முயற்சியில் இலங்கை தொடர்ந்தும் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக ஜெனீவாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. மனித உரிமைப்பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைப் பேரவைக்கான நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவரும் இலங்கை தூதுக்குழுவினர் இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணையை எதிர்க்குமாறு கேரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேவேளை, மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடனான தனிப்பட்ட சந்திப்புகள், உப குழுக் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளின் ஊடாக இவ்வாறு ஆதரவு திரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இலங்கை மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடு அல்ல என்பதால் இலங்கையினால் வாக்கெடுப்பை கோர முடியாது என்ற போதிலும் மற்றொரு உறுப்பு நாட்டின் ஊடாக வாக்கெடுப்பு கோரப்படும் என்று ஜெனீவா தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=3546 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE