......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 4 March 2013

அலவி மௌலானாவின் பேத்தியின் பர்தா மீது வெற்றிலை எச்சில் துப்பிய பேரினவாதி

Alevi_Mawlanaஅலவி மௌலானாவின் பேத்தி கொடோஹென வீதியில் நடந்து சென்ற வேளையில் அவ்வழியால் சென்ற தீவிரவாத பௌத்த கொள்கையுடைய முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் ஏன் இவ்வாறு மூடிக்கொண்டு செல்கிறாய் என கேட்டுவிட்டு அவரின் பர்தா மீது வெற்றிலை எச்சிலால் துப்பியுள்ளார் என லங்கா ஈ நியூஸ் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்கள் பேரின பௌத்த அமைப்புகளால் பலவகையான தாக்குதல்களை அரச அனுசரையுடன் மேற்கொள்ளும் இந்த கால கட்டத்தில் இந்த அநீதிக்கு எதிராக எந்த வித எதிர்ப்பையும் வெளியிடாத அல்வி மௌலானா போன்ற முஸ்லிம் பெயர்தாங்கி அரசியல்வாதிகள் அரசுக்கு ஆதரவளிப்பதன் மூலம் தீவிரவாத பௌத்த அமைப்புகளின் செயற்பாடுகளை அங்கீகரிக்கும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை அலவி மௌலானா, அமைச்சர் பௌசி உட்பட முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒன்றை அண்மையில் மேற்கொண்டனர். இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த முஸ்லிம் விரோத செயற்பாடுகள் வெளிநாடுகளின் சதி என்று கூறிய அதேவேளை அரசில் அங்கம் வகிக்கும் தீவிர முஸ்லிம் விரோத கட்சியான ஜாதிக ஹெல உறுமய இது ஐக்கிய தேசிய கட்சியின் சதி என்று கூறியுள்ளது.
தனது கண் முன்னாலேயே அரச பாதுகாப்பு அமைச்சின் நிதியுதவியுடன் முஸ்லிம் சமூகம் அழிக்கப்படும் வேளையில் அதை கண்டும் காணாமல் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது அரசியல் முன்னேற்றத்துக்காக சமூகத்தை அடகு வைக்கும் பைசல் முஸ்தபா போன்ற அரசியல்வாதிகளும் உள்ளனர்.


(மூலம்: kattankudyinfo.com)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE