இந்த விவகாரம் தொடர்பில் கருணாநிதிக்கும் மூத்த மத்திய அமைச்சர்கள் குழுவிருக்கும் இடையில் சென்னையிலுள்ள கலைஞர் இல்லத்திலேயே சந்திப்பு இடம்பெற்றது. இரண்டு மணி நேரங்களுக்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும் எவ்விதமான முடிவும் ஏற்படவில்லை என்று இந்தியச்செய்திகள் தெரிவித்தன.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை கோரும் திருத்தத்;தை இந்தியா கோராவிட்டால் மத்திய கூட்டணியில் தி.மு.க தொடராது என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந் நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி, நிதி அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் இது குறித்து கருணாநிதியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக பிரதமருக்குத் தெரியப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார் என்றும் அந்தச்செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பு நிறைவடைந்ததன் பின்னர் தி.மு.க தலைவர் மு கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
ஜெனிவாவில் வலுவான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் – அதில் இனப் படுகொலை மற்றும் சர்வதேச சுயாதீன விசாரணை ஆகியவை இடம்பெற வேண்டும் என்றும் கூறியுள்ளோம்.
இந்த விடயம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றமும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினேன் என்றும் கருணாநிதி மேலும் தெரிவித்தார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60997-2013-03-18-17-15-15.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.