......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 16 March 2013

வியட்நாம் கப்பலை கைப்பற்றவும்: நீதிமன்றம் உத்தரவு

லங்கா இந்திய எண்ணெய் நிறுவனத்திற்காக (லங்கா ஐ.ஓ.சி) 4500 மெற்றிக்தொன் எரிபொருட்களை ஏற்றிவந்த வியட்நாம் கப்பலை கைப்பற்றுமாறு கொழும்பு வர்த்தக நீதிமன்ற நீதவான் பி.பீ.எஸ் மொராயஸ் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

வியட்நாம் கொடியுடன் வந்துள்ள 'வினாலையின்ஸ் க்ளோரி' என்ற கப்பலையே கைப்பற்றுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தமக்கேற்பட்டுள்ள 25 இலட்சம் அமெரிக்க டொலர் (32 கோடி ரூபா) நட்டஈட்டுத்தொகையை பெற்றுத்தருமாறு விடுத்த கோரிக்கையை அடுத்தே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

குறித்த கப்பல் டீசல், பெற்றோல் மற்றும் கப்பலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

கப்பலுக்கு ஏற்றும் போது நல்லநிலையிலிருந்த எரிபொருட்கள் இலங்கைக்கு கொண்டுவருக்கின்றபோது தரங்குறைந்ததாக மாறிவிட்டது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த கப்பல் இலங்கை கடற்படையினரின் பாதுகாப்புடன் திருகோணமலை துறைமுக கடற்பரப்பில் நங்கூரம் இடப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. 


(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/60747-2013-03-14-15-55-32.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE