......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 3 March 2013

ஊர்காவற்றுறையில் குண்டு வெடிப்பு

-சுமித்தி தங்கராசா

ஊர்காவற்றுறையில் குண்டு வெடிப்பு சம்பவமொன்று சன்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் படைத்தரப்பை சேர்ந்த ஆறு பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடற் படையை சேர்ந்த ஆறு பேரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக கடற் படை பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.மண்கும்பான் என்ற இடத்தில் வைத்தே ஆர்.பீ.ஜி. என்ற குண்டே வெடித்துள்ளதாக தெரிவித்தார். 

குண்டு வெடிக்கவைத்ததன் பின்னர் அந்த குழலின் பின்பக்கத்திலிருந்து வெளியாகிய தீயினாலேயே இந்த ஆறு பேரும் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் நான்கு பேருக்கு கடும் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏவப்பட்ட குண்டு பனை மரத்தில் வீழ்ந்து வெடித்துள்ளது என்றும் கடற்படைப்பேச்சாளர் தெரிவித்தார். 


(மூலம்: http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/59916-2013-03-03-08-41-25.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE