......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 5 March 2013

ஜெனீவாவில் 5 ஆயிரம் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கோரி ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு முன்னால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்த வேண்டும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பினை விசாரணைக்குட்படுத்தி தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று பிற்பகல் முதல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரான்ஸ், லண்டன், ஜேர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்திருந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



(மூலம்:http://www.virakesari.lk/article/local.php?vid=3322 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE