கொம்பனித்தெருவிலுள்ள விமானப்படை முகாமுக்கு அருகிலுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவருக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் 2000 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றமே இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
கதிர்காமத்தைச்சேர்ந்த ருவான் சந்தன என்பவருக்கே கோட்டை நீதிமன்ற நீதவான் ஜிஹான் பலப்பிட்டிய மேற்கண்டவாறு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
விமானப்படை முகாமுக்குள் எல்லை மீறிநுழைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கொம்பனித்தெரு பொலிஸாரினால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
அந்த சந்தேநபர் சுமார் 150 அடி உயரமான கோபுரத்தில் ஏறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையினால் பொறுப்பேற்கப்பட்ட காணிக்கு நட்டஈடு வழங்கவேண்டும் என்று கோரியே குறித்த நபர் கோபுரத்தின் மீதேறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நபர் கதிர்காமத்திலுள்ள கோபுரம் ஒன்றில் இதற்கு முன்னரும் இவ்வாறு ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60995--2-.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.