......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 28 February 2013

இலங்கை சிறையிலிருந்த இரு இந்திய பிரஜைகள் கேரளாவுக்கு மாற்றம்

இலங்கையில் சிறைவாசம் அனுபவித்து வந்த இரண்டு இந்தியப் பிரஜைகள், குற்றவாளிகளை மாற்றம் செய்யும் இந்திய - இலங்கை இரு தரப்பு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளின் கீழ் இன்று புதன்கிழமை, கேரளாவிலுள்ள திருவாந்திரபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


இன்று மாற்றம் செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட இருபது பேரின் (கேரளாவிலிருந்து 6 பேரும் தமிழ் நாட்டிலிருந்ர் 14பேரும்) சட்ட ஒழுங்குமுறைகள் யாவும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் ஒரு வாரத்துக்குள் வீடு திரும்புவர் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. 

இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

குற்றவாளிகளாகக் காணப்பட்டு இலங்கையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 31 இந்தியப் பிரஜைகள், இந்த ஒப்பந்தத்தின் கீழ் மாற்றப்படுவதற்கு தகுதியுடையவர்களாவர். சட்ட ஒழுங்கு விதிமுறைகள் யாவும் நிறைவேற்றப்பட்டபின் இவர்கள் இந்தியாவுக்கு மாற்றம் செய்யப்படுவார்கள். மிகுதியான 11 பேரினதும் சட்ட ஒழுங்கு முறைமைகள் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. 

குற்றவாளிகளை மாற்றம் செய்வதற்கான இந்திய - இலங்கை இருதரப்பு உடன்படிக்கை 2010 ஜூன் 9ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. குற்றவாளிகளை மாற்றம் செய்வதற்கான நிபந்தனைகளையும் மாற்றம் செய்யும் நாடும் அவர்களை ஏற்றுக்கொள்ளும் நாடும் கடைப்பிடிக்க வேண்டியப ல்வேறு சட்டரீதியான கடப்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 

ஆதற்கமைய தகுதியானவருடைய வேண்டுகோள் இலங்கை அரசாங்கத்தினால் பரிசீலனை செய்யப்பட்டு இந்திய தரப்பில் செய்ய வேண்டிய சட்ட ஒழுங்குகளை நிறைவேற்றும் பொருட்டு இந்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மாற்றம் செய்யப்படும் குற்றவாளிகள் தங்கள் தண்டனையின் மிகுதிக் காலத்தை இந்திய சிறையில் கழிப்பர். 

இதில் சம்பந்தப்பட்ட இலங்கை அரசாங்கத் திணைக்களங்களினால் வழங்கப்பட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, எதிர்காலத்திலும் இதுபோன்ற ஒத்துழைப்பு தொடர வேண்டுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 


(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59696-2013-02-27-14-35-34.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE