தேசியமயப் படுத்தல் (நேசனலிசேஷன்) எனப்படும் திட்டத்தின் கீழ் மண்ணின் மைந்தர்களுக்கு பணி வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், எந்த ஒரு நிறுவனமும் தன் மொத்த ஊழியர்களில் 50%க்கும் குறைவாக சவூதியரை பணிக்கு வைத்திருந்தால், அந்நிறுவனத்தின் ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியருக்கும் சவூதி ரியால்கள் 2,400/= வருடாந்தம் கட்ட வேண்டும் என்று சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
வெளிநாட்டுப் பணியாளர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சில நிறுவனங்கள் தம் ஊழியரின் சம்பளத்தொகை, ஊக்கத்தொகை ஆகியவற்றில் இத்தொகையை வசூலித்துவந்தன.
இந்நிலையில், வியாழனன்று ரியாத்தின் இமாம் துர்க்கி பின் அப்துல்லா பள்ளிவாசலில் உரையாற்றிய சவூதி தலைமை மார்க்கத் தீர்ப்பாளர் (முஃப்தி) ஷேக் அப்துல் அஸீஸ் ஆல் ஷேக் , இந்த முடிவை ஊழியர் நலத்துறை அமைச்சகம் மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். வெளிநாட்டுப் பணியாளர் மீது சுமத்தப்படும் இத்தொகை நியாயமற்றது என்று அவர் கூறினார். இம்முடிவு தர்க்க நியாயங்களற்றதே என்றும் அவர் கூறினார். மேலும் ஊழியர்களுக்கு உடனுக்குடன் சம்பளம் வழங்கவேண்டும் , அவர்களை கனிவுடனும் பரிவுடனும் நடத்த வேண்டும் என்றும் இமாம் கேட்டுக்கொண்டார்.
இந்த கட்டணத்தின் படி ஊழியர் நலத்துறை அமைச்சகம் மேலதிகமாக வசூலித்த தொகையைத் திரும்பப் பெற நிறுவனங்கள் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் ஷேக் அப்துல் அஸீஸ் கேட்டுக்கொண்டார்.
(inneram)(மூலம்:kattankudyinfo.com )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.