கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட இறுதி ஆண்டில் கல்வி பயிலும் அஞ்சலா பிரியதர்ஷினி என்ற குறித்த மாணவி தடுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்ட நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவரது கை வெட்டி அகற்றப்பட்டது.
இதனையடுத்து, வைத்தியர்கள் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தினாலேயே மாணவிக்கு கை அகற்றப்பட்டுள்ளதாகவும் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இது குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு மூவர் அடங்கிய விசேட குழு ஒன்றை சுகாதார அமைச்சு அமைத்தது.
மூவர் அடங்கிய விசேட குழு 22 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவம் தொடர்பிலான அறிக்கையை சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயத்திலகவிடம் கையளித்துள்ளது.
(http://www.virakesari.lk/article/local.php?vid=2991)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.