மாவட்ட செயலாளர் (அரசாங்க அதிபர்)
மாவட்ட செயலகம்
மட்டக்களப்பு
மாவட்ட செயலகம்
மட்டக்களப்பு
அம்மணி
நிலத்தொடர்பு ரீதியாக முஸ்லிம் வாக்காளர்களை உள்ளக்கிய வகையில் வட்டாரங்களை ஏற்படுத்தல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் நடாத்தப்படவிருக்கின்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் புதிய தேர்தல் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைவாக நடாத்துவதற்கு தேர்தல் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் முதல் கட்டமாக வட்டாரங்களை புதிதாக உருவாக்குதல் அல்லது வட்டாரங்களை பிரித்து அதன் எல்லைகளை வரையறுப்பதற்கான நடவடிக்கை தங்களது தலைமையிலான குழுவின் மூலம் ஏற்படுத்தப்படவுள்ளது.
இதன் போது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவின் மட்டக்களப்பு மாநகர சபைக்கான வட்டாரங்களும் பிரிக்கப்படவுள்ளது. இவ்வட்டாரங்கள் பிரிக்கப்படும் போது தற்போது நடைமுறையிலுள்ள வட்டாரங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் 19 வட்டாரங்களும் வட்டார ரீதியிலான தேர்தல் நடைமுறையும் இருந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு 1ம் வட்டாரத்திலிருந்து ஒரு முஸ்லிம் பிரதிநிதியும் 19ம் வட்டாரத்திலிருந்து ஒரு முஸ்லிம் பிரதிநிதியுமாக இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு வந்தனர்
கடந்த காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எற்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாகவும் திருத்தியமைக்கப்பட்ட விகிதாசாரத் தேர்தல் நடைமுறையினாலும் மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஒரு முஸ்லிம் பிரதிநிதியே தெரிவு செய்யப்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது, அதனால் ஒரு முஸ்லிம் பிரதிநிதியால் ஐந்திற்கும் (05) மேற்பட்ட கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் முஸ்லிம் வாக்களர்களின் அடிப்படைத் தேவைகளையும் அபிவிருத்திப் பணிகளையும் நிறைவேற்ற முடியாத ஒரு கஸ்டமான நிலை காணப்பட்டு வருகின்றது
கடந்த காலத்தில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாக 1ம் வட்டாரத்தில் வசித்த முஸ்லிம் வாக்காளர்களில் அதிகமானவர்கள் 18ம், 19ம் வட்டாரங்களிலும் நாட்டின் ஏனைய சில பிரதேசங்களிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதால் இம்முறை 1ம் வட்டாரத்திலிருந்து ஒரு முஸ்லிம் பிரதிநிதி தெரிவு செய்யக் கூடிய வாய்ப்பு இல்லாமல் போகும் நிலையே காணப்படுகின்றது
எனவே இம்முறை வட்டாரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு புதிதாக பல வட்டாரங்கள் ஏற்படுத்தப்படவிருப்பதால் தற்போது நிலத் தொடர்பு ரீதியாக இருந்து வரும் மஞ்சந்தொடுவாய் தெற்கு, மஞ்சந்தொடுவாய் வடக்கு, நாவற்குடா கிழக்கு, நொச்சுமுனை போன்ற கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் முஸ்லிம் வாக்களர்களை உள்ளடக்கியதாக இரண்டு வட்டாரங்களை ஏற்படுத்துவது பொருத்தமாகும்.
கடந்த காலத்தில் 19 வட்டாரமும் வட்டார ரீதியிலான தேர்தல் நடைமுறையும் இருந்த போது இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது வட்டாரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் போது மட்டக்களப்பு மாநகர சபைக்கான முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும்.
ஆனால் அதற்கு மாறாக மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஒரேயொரு முஸ்லிம் பிரதிநிதியை மட்டுமே தெரிவு செய்யக் கூடிய வகையில் வட்டாரங்கள் பிரிக்கப்படுவதற்கான திட்டமிடல் இடம்பெறுவாதாக என்னால் அறிய முடிகின்றது
எனவே அவ்வாறு வட்டாரங்கள் பிரிக்கப்படும் போது எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் வட்டாரங்கள் பிரக்கப்பட்டு கடந்த கால வட்டார தேர்தல் காலத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளை விட அதிகரிக்கப்படாவிட்டாலும் கடந்த காலத்தில் நடைமுறையில் இருந்து வந்த இரண்டு பிரதிநிதியையேனும் முஸ்லிம் வாக்களர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் தற்போது காணப்படும் நிலத் தொடர்பு ரீதியாக வட்டாரங்களை இரண்டாகப் பிரித்து இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளை மட்டக்களப்பு மாநகர சபைக்கு பெற்றுக் கொள்வதற்கு ஆவன செய்ய வேண்டும் என தங்களை மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வண்ணம்
………………………….
NK றம்ழான் JP
மாநகர சபை உறுப்பினர்
மட்டக்களப்பு
NK றம்ழான் JP
மாநகர சபை உறுப்பினர்
மட்டக்களப்பு
பிரதிகள் தகவலுக்காக
01 கௌரவ பஸீர் சேகுதாவூத், உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அமைச்சர்
02 தலைவர்ஃசெயலாளர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்
01 கௌரவ பஸீர் சேகுதாவூத், உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அமைச்சர்
02 தலைவர்ஃசெயலாளர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்
(kattankudyinfo)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.