......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 12 February 2013

பொருளாதார சுமையால் நிறைவேறாத காதல் திருமணங்கள்..

By V.Priyatharshan
இளைஞர் யுவதிகளின் பல காதல் திருமணங்கள் பொருளாதார சுமையால் நிறைவேறாது இடைநடுவில் கைவிடப்பட்டதாக ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.


பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சேஷலிச இளைஞர் முன்னணியின் காதலர் தின விழிப்புணர்வு குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றத்தாலும் பொருளாதார சுமைகளினாலும் பல இளைஞர், யுவதிகளின் காதல் திருமணங்கள் நிறைவேறாது இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளன. 

குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் சாதாரண திருமண வைபவத்தை நகரப்புரத்தில் நிறைவேற்றுவதென்றால் குறைந்தது 10 இலட்சம் ரூபாவாவது தேவை. அந்தளவிற்கு நாட்டில் விலைவாசி உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு சேஷலிச இளைஞர் முன்னணியினால் விசேட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. குறிப்பாக ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் பதுளை போன்ற நகரங்களில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதுடன் சுவரொட்டிகளையும் ஒட்டவுள்ளோம் என்றார்.



(http://www.virakesari.lk/article/local.php?vid=2992)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE