ஜனாதிபதி, வெளிநாட்டு அமைச்சருடன் பேச்சு
இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா நேற்று மாலை இலங்கைக்கு வருகை தந்ததாக வெளிவிவகார அமைச்சு கூறியது.
மூன்று நாட்கள் இங்கு தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கியஸ்தர்களை சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையி லான சந்திப்பு இன்று (11) வெளிவிவகார அமைச்சில் நடைபெறுகிறது.
பொதுநலவாய உச்சிமாநாட்டு ஏற்பாடுகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து இங்கு ஆராயப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.
பொதுநலவாய செயலாளருக்கும் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ¤க்குமிடையிலான சந்திப்பொன்று கடந்த வாரம் இலண்டனில் நடைபெற்றது. ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கை குழு கூட்டம் பற்றியும் அதில் இலங்கையை ஒரு விடயமாக உள்ளடக்கியிருப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தமது ஆட்சேபனையை தெரிவித்தார்.
பொதுநலவாய உத்திமாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு கனடா அடங்கலான ஓரிரு நாடுகள் ஆட்சேபனை தெரிவித்து வரும் நிலையிலே இலங்கையில் உச்சிமாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய பொதுநலவாய செயலாளர் அடங்கலான குழு இலங்கை வந்துள்ளது.
பொதுநலவாய உச்சிமாநாட்டிற்கான பிரத்தியேக இணையத்தளம், விசேட இலட்சினை என்பனவும் இதன்போது உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்க வைக்கப் படும் ஹோட்டல்கள், கூட்டம் நடத்தப்படும் இடங்கள் குறித்து இதன்போது ஆராயப் பட்டு தீர்மானிக்கப்பட உள்ளதாக அறி விக்கப்படுகிறது. சில அரச சார்பற்ற நிறு வனங்களும் சில நாடுகளும் இலங்கையில் உச்சி மாநாட்டை நடத்த ஆட்சேபித்து வருவது குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆராயப்படும் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுநலவாய செயலாளர் நாளை ஜனாதிபதியை சந்திக்க உள்ளார்.
கடந்த வருடம் பொதுநலவாய பாராளு மன்ற மாநாடு வெற்றிகரமாக இலங்கையில் நடத்தப்பட்டது. தலைவர்கள் மட்ட உச்சிமாநாட்டையும் சிறப்பாக நடத்த இலங்கை முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
(http://www.thinakaran.lk/2013/02/11/?fn=n1302119)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.