இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமோன் தீவுகளில் இன்று அதிகாலை 6.45 மணிக்கு (இந்திய நேரப்படி) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது. பசிபிக் கடலில் நிலத்துக்கு அடியே 5.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதையடுத்து சாலமோன் தீவுகள், வனாது, நௌரு, பாபுவா நியூ கினியா, பிஜி, வேல்ஸ் மற்றும் ஃப்யூடுனா, கிரிபாடி தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் தென் பசிபிக் கடலோரம் உள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு சான்டா க்ரூஸ் தீவுகளில் உள்ள லடா வார்ப் பகுதியில் 3 அடி உயரத்திற்கு கடல் அலை எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக சாலமோன் தீவுகள் பகுதியில் அவ்வப்போது மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு சாலமோன் தீவுகளில் 8.1 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சுனாமி ஏற்பட்டது. இதில் 52 பேர் பலியாகினர், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Wednesday, 6 February 2013
சாலமோன் தீவு அருகே கடலில் பயங்கர நிலநடுக்கம்: ஆஸி, இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை
இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமோன் தீவுகளில் இன்று அதிகாலை 6.45 மணிக்கு (இந்திய நேரப்படி) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது. பசிபிக் கடலில் நிலத்துக்கு அடியே 5.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதையடுத்து சாலமோன் தீவுகள், வனாது, நௌரு, பாபுவா நியூ கினியா, பிஜி, வேல்ஸ் மற்றும் ஃப்யூடுனா, கிரிபாடி தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் தென் பசிபிக் கடலோரம் உள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு சான்டா க்ரூஸ் தீவுகளில் உள்ள லடா வார்ப் பகுதியில் 3 அடி உயரத்திற்கு கடல் அலை எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக சாலமோன் தீவுகள் பகுதியில் அவ்வப்போது மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு சாலமோன் தீவுகளில் 8.1 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சுனாமி ஏற்பட்டது. இதில் 52 பேர் பலியாகினர், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.